விக்கிரமங்கலம், ஏப். 7- மதுரை புறநகர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதி சரித்திர நாயகர் கண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 72- ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. “பெரியார் பிறந்திருக்காவிட்டால்?” என்ற தலைப்பில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
5.4.2025 அன்று மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் து.சந்திரன் தலைமை வகித்தார்
பொதுக்குழு உறுப் பினர் ரோ.கணேசன் வரவேற்று உரையாற்றி னார். மாவட்ட கழக தலைவர் த.ம.எரிமலை, மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சி.சுதாகரன் தொடக்க உரையாற்றினார். மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன், கழக பேச்சாளர் மதுரை அ.வேல்முருகன், மாவட்ட மகளிரணி தலைவர் பெ.பாக்கியலெட்சுமி ஆகியோர் உரையாற்றினார் கள்.
மாவட்ட துணைத் தலைவர் அழ. சிங்க ராசன், தொழிலாளர் பேரவை தலைவர் கா. சிவகுருநாதன், மாவட்ட மகளிர் அணிசெயலாளர் இரா.கலைச்செல்வி, சோழவந்தான் கழக தலைவர் கோ.தங்கராசு, இரகுராமன், உள்ளிட் டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். விக்கிர மங்கலம் கழக செயலாளர் சொ. சசிகுமார் நன்றி கூறினார் .
மந்திரமா தந்திரமா
தொடக்கத்தில் மதுரை சுப. பெரியார் பித்தனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர் களுக்கு மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நன்றி பாராட்டி பயனாடை போர்த்தி சிறப்பித்தார்.