டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு மாணவர் களின் மீது துளியாவது அக்கறை இருந்தால், நீட் விலக்கு அளித்தால்தான் பாஜக கூட்டணியில் இணைவோம் என அறிவிக்க முடியுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வலியுறுத்தி, பொதுப் பள்ளி மேடைக்கான பாதுகாப்பு குழு தலைவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கடிதம்.
* அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆர்ப்பாட்டம்.
* பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை பங்கேற்பு
* அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பை அய்ரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க முடிவு.
* கருநாடக காங்கிரஸ் தலைவராக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து செயல்படுவார், காங்கிரஸ் தலைமை அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய பொதுச் செயலா ளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார்.
* பீகாரில் காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தொகுதி மறுசீரமைப்பு “பெரிய சதி”, பிரதமர் மாநில மக்களின் “நியாயமான அச்சங்களை களைய வேண்டும்” என பிரதமரின் ராமேசுவர பயணத்தைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்.
தி இந்து:
* பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தின் செங்குத்து லிப்ட் ஸ்பான், குறைக்கப்படும் போது பாதியில் சிக்கிக்கொண்டதால், மூத்த ரயில்வே அதிகாரிகள் மத்தியில் கவலை. பின்னர் சரி செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
* “ஒரு முறை வக்ஃப், எப்போதும் வக்ஃப்” என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வக்பு திருத்த சட்டம் மீறுவதாகவும், முஸ்லிம் சமூகத்தின் பழைமை யான வக்ஃப் நிலங்களைப் பறித்து, அவற்றை தனியார் அல்லது அரசு சொத்தாக மாற்றுவதற்கு வசதி செய்வதாகவும் மனுதாரர்கள் சார்பில் வாதம்.
தி டெலிகிராப்:
* வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து, டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அய்தராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.
– குடந்தை கருணா