டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து, ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானுத்துல்லா கான், மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபாரம் – நாட்டிலேயே நம்பர் 1 மாநிலம்: பத்தாண்டுகளில் இல்லாத அளவில் 9.69 விழுக்காடு புதிய உச்சம், ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தில் தகவல்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தற்போது முஸ்லிம்களை தாக்குகிறது.எதிர்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீது கவனம் செலுத்த ஆர்எஸ்எஸ்சுக்கு அதிக நேரம் ஆகாது. அரசியல் சாசனம் மட்டுமே இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரே கேடயம். அதனால் அரசியல் சாசனத்தை பாதுகாப்பது நமது கூட்டு கடமை” என தன் எக்ஸ் தள பதிவில் ராகுல் காந்தி கடும் தாக்கு.
* நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
* தெலங்கானாவில் நிறைவேற்றப்பட்ட 67 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு, தமிழ்நாட்டைப் போல், ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திட தலைவர்கள் வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* உச்ச நீதிமன்றத்திற்கு வரும் வெறுப்புப் பேச்சு வழக்குகளில் பெரும்பாலானவை “மத சிறுபான்மையினர் அல்லது தாழ்த்தப்பட்ட ஜாதிகள் போன்ற சிறுபான்மையினரான ஒடுக்கப்பட்ட வகுப்புகளில் உள்ள ஜாதிகளுக்கு” எதிரானவை என கொலம்பியா மாணவர் களிடையே உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி
ஏ.எஸ். ஓகா, பேச்சு.
* ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் வக்பு திருத்த மசோதாவை குப்பைத் தொட்டியில் வீசுவோம்’ என்று தேஜஸ்வி யாதவ் காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஆரம்ப கட்டங்களில் திமுக அரசு தேசிய கல்விக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறையை தடுப்பது போல, அதிமுகவும் போராடி நீட் தேர்வை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். “இப்போது உச்ச நீதிமன்றம் மட்டுமே நமக்கான ஒரே வழி. இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. இவை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தர வழி, கல்வியை அரசமைப்பின் பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகும் என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அரி.பரந்தாமன்.
– குடந்தை கருணா