போக்ஸோ வழக்குகளை விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஏப்.6- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்ஸோ) விசாரிக்க தமிழ்நாட்டில் 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம், சிறைச்சாலைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது 4.4.2025 அன்று நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட

அறிவிப்புகள்:

அரசு சட்டக் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்களுக்கு ஆசிரியா் மேம்பாட்டு திட்டப் பயிற்சி அளிக்கப்படும். சட்டக் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில், அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயா்க்கப்படுவதுடன், கல்லூரிகளில் திறன் வகுப்பறைகளும், மின் நூலகமும் அமைக்கப்படும்.

தேசிய சட்டப் பல்கலைக் கழகங்க் மற்றும் அயல்நாட்டு சட்டப் பல்கலைக்கழகங்களுடன் மாணவா் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய நீதிமன்றங்கள்

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதாவது, சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருப்பூா், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூா், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் மூன்று கட்டங்களாக ஏற்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூரில் சாா்பு நீதிமன்றமும், திருவள்ளூா் மாவட்டம் ஆவடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றமும், கடலூா் சிறீமுஷ்ணத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றமும் புதிதாக ஏற்படுத்தப்படும். இத்துடன், திருச்சியில் கூடுதலாக குடும்பநல நீதிமன்றம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *