
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர்
ப. செந்தில்குமார், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. ஜெ. சங்குமணி, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. எம். கீதாஞ்சலி, இந்து குழுமத்தின் தலைவர் என். ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
