சென்னை, நவ.14- அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் இளங்கோவன், கிளை மேலாளர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அனைத்து போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர் களின் வாரிசுகள் – மருத்துவம், பொறியியல், கலை மற்றும் டிப் ளமோ ஆகிய கல்வி பயில் பவர்களுக்கு கல்லூரியில் இருந்து இருப்பிடத் துக்கு வந்து செல்ல 10 முறை இலவச பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் நமது மிதவைப் பேருந்து மற்றும் அனைத்து போக்குவரத்துக்கழக பேருந்துகளிலும் பயணித்து வந்தனர்.
அதேநேரம், நமது அதிநவீன சொகுசு பேருந்துகளில் அவர்கள் பயணிக்க நேரிட்டால், அதற்கான வித்தியாசத் தொகையை செலுத்தி பயணித்து வந்தனர்.
இந்த நிலையில், மிதவைப் பேருந்து முற்றிலுமாக மாற்றப் பட்டு அதிநவீன சொகுசுப் பேருந் துகளாக இயக்கப்பட்டு வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் விரைவுப் போக்குவரத்துக் கழகத் தால் இயக்கப்படும் முதல் நிலை வகையான அதிநவீன சொகுசு பேருந்துகளில் அனைத்து போக்கு வரத்துக்கழக பணியாளர்களின் பிள்ளைகளிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் பெறாமல் அனைத்து நடத்துநர்களும் அனுமதிக்க வேண் டும். இதனை அனைத்து பயணச் சீட்டு பரிசோதகர்களும் கண்கா ணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.