சென்னை, ஏப். 5- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் 7,557 தேர்வர்கள் அரசுதுறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப் பட்டு இருப்பதாகவும், மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாகவும் டி.என். பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லா மல், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேர்வர்களின் நலன் கருதியும், தேர்வு பணிகளை விரைவுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. பட்டியலிட்டு இருக்கிறது.
அதன்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளுடன் 125 நாட்களில் நிரப்பப்பட்டன.அதேபோல், குரூப்-4 பணியிடங்கள் 184 நாட்களில் நிரப்பப்பட்டதாகவும், இது 2022ஆம் ஆண்டு தேர்வுகளுடன் ஒப்பிடும்போது, 5 மாதங்களுக்கு முன்னதாக முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், குரூப்-1,1பி பணி இடங்கள், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் போன்றவற்றையும் குறுகிய நாட்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுதவிர தேர்வு நடைமுறைகளில் வெளிப்ப டைத் தன்மை, தேர்வு கட்டணங்களை யு.பி.அய். மூலம் செலுத்தும் வசதி, காலிப் பணியிட விவ ரங்களை இணையவழியாக பெறும் முறை, தேர் வர்களின் பெற்றோருக்கு காத்திருப்புக் கூடம் போன்றவசதிகள் செய்து தரப்பட்டது குறித்தும் டி.என்.பி.எஸ்.சி. விரிவாகதெரிவித்ததோடு மட் டுமல்லாமல், புதிய பாடத்திட்டம், தேர்வு அட் டவணையை சரியாக வெளியிடுதல், தேர்வர்க ளுக்கு தகவல்களை சரியாக வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்தும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.