கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.53.18 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 5- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் 03.04.2025 அன்று விவாதத்தின்போது கூறியதாவது:

கடலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை ஒரு தனியார் மருத்துவமனையை அரசு உடமையாக்கப்பட்ட ஒன்று. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களு டைய வழிகாட்டுதலோடு, அந்த மருத்துவமனைக்கு மட்டும், இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, பல்வேறு புதிய கட்டிடங்கள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கட்டிடங்கள் மட்டுமல்லாது, பல்வேறு ஆய்வு களின்மூலம் அந்த நிர்வாகத்தை சீர்திருத்தும் பணியும் தொடர்ந்து செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களு டைய வழிகாட்டுதலோடு, இதுவரை ரூ.12.98 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தற்போதும்கூட, ரூ.53.18 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆக ஒரு புதிய மருத்துவக் கல்லூரியையே கட்டியிருக்கலாம். கடந்த கால ஆட்சியில் அதை அரசுக்கு எடுத்து, ஒரு பெரிய அளவிலான நிதி நெருக்கடியை ஏற்படுத்தி இப்போது எல்லா பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

அண்மையில்கூட, 200 புதிய பணியிடங்களை உருவாக்கி, அந்தப் பணியிடங்கள் நிரப்பும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்போது புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலைக்கு ஏற்ப, இரண்டு, மூன்று மருத்துவக் கல்லூரிகள் என்று எடுத்து, இந்த இருதய தீவிர சிகிச்சைப் பிரிவான cathlab machine அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொன்றும் அமைப்பதற்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை செலவாகிறது. நிச்சயம் நான் ஏற்கெனவே சொன்னது போல இந்த மருத்துவக்கல்லூரி

மருத்துவமனையில் ரூ.50 கோடிக்கும் மேல் அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் அங்கேயும் அமைத்து தருவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சட்டப்பேரவையில் விவாதத்தின்போது பதிலளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *