பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 12.3.2025 அன்று மாலை பொள்ளாச்சியின் பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் (கோவை தெற்கு மாவட்டம்) என்.கே. பகவதி தலைமையில் கூடி பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமெனத் தமிழ்நாட்டு முதலமைச்சரைக் கேட்டுக் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
பொள்ளாச்சி வட்டம் மற்றும் உடுமலைப் பேட்டை வட்டத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் சென்ற பத்தாண்டுகளாக பொள்ளாச்சி மாவட்டம் உருவாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக வால்பாறை, முடீஸ், டாப்சிலிப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் கோவை மாவட்ட அலுவலகத்திற்குச் ெசன்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். அதன் காரணமாகவும், அத்துடன் மேனாள் அமைச்சர் மு. கண்ணப்பன் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள காரணங்களுக்காகவும் மற்றும் செய்தித்தாள் இணைப்புக்களில் கண்டுள்ள காரணங்களுக்காகவும் பொள்ளாச்சியைத் தலைமையிட மாகக் கொண்ட பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்குவது பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, மூடீஸ், சோலையார், ஆனைமலை, டாப்சிலிப் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது பேருதவியாக அமையும் எனவும், மேலும் இப்பகுதிகளின் வளர்ச்சியில் இது பெரும் தாக்கத்தை விரைந்து ஏற்படுத்தவும் கூடும்.
எனவே கீழ்க்கண்ட தீர்மானப்படி தக்கதொரு நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்வார்கள் என்று பெரிதும் நம்புகின்றோம்.
(தீர்மானத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பொள்ளாச்சி பகுதியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்.
அய்யா வணக்கம்.. பொள்ளாச்சி தனி மாவட்டக் கோரிக்கை என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தற்போது உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் இணைத்து பழனி மாவட்டம் உருவாக்கப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்குவதன் அவசியத்தை ஏற்ெகனவே திமுக உயர்நிலை திட்டக்குழு உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான மு. கண்ணப்பன் தங்களது பார்வைக்கு கோரிக்கையாக அனுப்பி உள்ளார். அவரது கோரிக்கையின் உண்மைத் தன்மையை அறிந்து உடனடியாக பொள்ளாச்சி மாவட்டத்தை அறிவிக்குமாறு பொள்ளாச்சி பகுதி அனைத்துக் கட்சி சார்பில்
கேட்டுக் கொள்கிறோம்.
– தி. பரமசிவம்
காப்பாளர்,
பொள்ளாச்சி மாவட்ட திராவிடர் கழகம்