குடந்தை ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
மருதாநல்லூர், ஜூலை 6- குடந்தை ஒன்றிய திராவி டர் கழக கலந்துரையாடல் கூட்டம் மருதாநல்லூர் கோவி.மகாலிங்கத்தின் பெரியார் உணவகத்தில் 30.6.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மருதாநல் லூர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
குடந்தை மாநகர மகளிர் அணி செயலாளர் மு.அம்பிகா, மாநகர செயலாளர் வழக்குரை ஞர் பீ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினர்.
திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழக செய லாளர் அ.சங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.திரிபுரசுந்தரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பொறியா ளர் க.சிவகுமார், மாண வர் கழகத் புதிய தோழர் செந்தமிழன், மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு. துரைராசு, மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி ஆகியோர் கூட்டத்தின் நோக்கங் களை செயல்படுத்துவது குறித்து உரையாற்றினர்.
கூட்டத்தின் நோக்கங் களைப் பற்றியும், கடந்த பொதுக் குழுவின் தீர்மா னங்கள், விடுதலை சந்தா புதுப்பிப்பு மற்றும் புதிய சந்தா சேர்த்தல், ஒவ் வொரு ஒன்றியத்திலும் பயிற்சி வகுப்பு நடத்து வது, புதிய கிளைக் கழ கங்கள் உருவாக்குவது, வைக்கம் போராட்டம் விளக்க தெருமுனைப் பிரச்சாரம் போன்ற தீர் மானங்களை விளக்கி தலைமைக் கழக அமைப் பாளர் குடந்தை க.குரு சாமி கருத்துரையாற்றினார்.