தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை
ராமேசுவரம், ஏப்.5 பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ராமேசுவரம் பாம்பனில் உள்ள பள்ளி வாசலின் (மசூதி) மினா ராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பதாக சர்ச்சைகள் வெடித்த நிலையில் தற்போது அந்த தார்ப்பாய் அகற்றப்பட்டது.
எஸ்டிபிஅய் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டிருந்த அறிக்கையில், புதிய பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு நிகழ்வுக்கான பிரதமர் மோடியின் ராமேசுவரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பாலத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் மினாராவில் உள்ள எழுத்துகளை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். இது மதச்சார்பின்மையை அடிப் படையாகக் கொண்ட இந்திய அரசமைப்பிற்கு எதிரானது மட் டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயலாகவும் உள்ளது என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ராமேசுவரம் பாம்பனில் விசாரித்த போது, பிரதமர் மோடி வருகை தர இருப் பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாம்பன் மசூதியின் மினாராவில் பெயர்ப் பலகை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது; அங்கு கட்டுமானப் பணிகளும் நடை பெற்றன; இதனால் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது என்று விளக்கம் தரப்பட்டது.
தற்போது சர்ச்சைக்குரிய மசூதியின் மினர்வாவை மறைத்த தார்ப்பாய் முற்றிலும் அகற்றப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கை மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மோடியின் ராமேசுவரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பாலத்திற்கு அருகிலுள்ள பள்ளி வாசலின் மினாராவில் உள்ள “Allah Akbar” (God is Great) என்ற எழுத்துகளை தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.