செய்திச் சுருக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அ.தி.மு.க.வில்
சுவரொட்டி போராட்டம்

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் தமிழ்நாடு அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது. இபிஎஸ் ஒளிப்படத்தை புறக்கணித்துவிட்டு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முக்கியம் என்னவென்றால் ‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது தான்.

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு அறிவிப்பு

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தாலுகா மற்றும் ஆயுதப் படையில் உள்ள 1,299 காலிப் பணியிடங்களுக்கு வரும் 7ஆம் தேதி முதல் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)அறிவித்துள்ளது.

வீண் வம்பு
மதவெறிப் பேச்சு

பாகிஸ்தானை ‘ஹிந்து ராட்டிரா’-வாக மாற்றுவோம் என மகாராட்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவை ‘ஹிந்து பாகிஸ்தான்’ என மாற்ற விரும்புவதாக தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ரானே இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னதாக, கேரளாவை குட்டி பாகிஸ்தான் எனவும், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என கூறியவர்தான் ரானே.

என்ன பண்ணப் போறீங்க..
ஒன்றிய அரசுக்கு ராகுல் கேள்வி

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்திய நிலத்தை திரும்ப தரும்படி மோடியும், குடியரசுத் தலைவரும் சீனாவுக்கு கடிதம் எழுதியது குறித்து சீன தூதர் தெரிவித்ததை வைத்தே விஷயம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக விமர்சித்தார். இந்திய நிலத்தை திரும்ப பெற அரசு என்ன செய்ய போகிறது எனவும் வினவினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *