ஆங்கிலப் புலமையால் அமெரிக்க “ஹார்வேர்ட” பல்கலையில் பழங்குடியின மாணவி ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி சீமா குமார். இவரது கிராமத்தில் இன்றுவரை மின்சாரம் இல்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை.
ராஞ்சியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் பயின்ற இவர் ஆங்கிலத்தில் மிகவும் புலமைபெற்றவராக திகழ்ந்தார். இவரது ஆங்கிலப் புலமையைக் கண்ட அவரது பள்ளி தலைமை ஆசிரியர் டில்லியில் உள்ள பிரிட்டீஷ் கவுன்சிலுக்கு அவரது விபரத்தை அனுப்பி வைத்தார்.
இதனை அடுத்து அவரை நேரில் வரவழைத்து அவரது ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்த பிரிட்டீஷ் தூதரக அதிகாரி அவரை ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க ஆலோசனை கூறி பிரிட்டீஷ் கவுன்சில் மூலமே அவர் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பயில அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தார்.
தற்போது மின்சார வசதிகூட இல்லாத கிராமத்தில் பிறந்து வளர்ந்த சீமாகுமாரி அமெரிக்க ஹார்வேர்ட் பல்கலைக்கழக மாணவியாக உள்ளார்.