கல்வி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்?

2 Min Read

ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கை (National Education Policy NEP 2020) மற்றும் பிரதான் மந்திரி உச்சதர சிக்ஷா அபியான் (PMUSHA) போன்ற திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதியை பெறுவதற்கு மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் மற்றும் ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கல்வித் திட்டம்

தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்கவில்லை. காரணம் இந்த மாநிலங்களில் சிறந்த கல்வித்திட்டம் உள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, 2024-2025ஆம் ஆண்டுக்கான கல்வி நிதியில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,152 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.1,000 கோடி மற்றும் கேரளாவிற்கு ரூ.859 கோடி ஆகிய தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிதி, பிஎம்சிறீ திட்டம் (PM Shri Scheme) மற்றும் மற்ற ஒன்றிய அரசின் ஆதரவு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், இந்த நிதிகள் வழங்கப்படவில்லை.
மாறாக, இந்த தொகைகள் குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களுக்கு மாற்றி வழங்கப்பட்டன.
எடுத்துக்காட்டாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.4,487 கோடி மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.3,374 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்கவில்லை

மொழி திணிப்பு

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை (threelanguage policy) உள்ளடங்கியுள்ளது, இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருமொழி கொள்கையை ஆதரிக்கும் மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கின்றனர்.

சுயாட்சி இழப்பு

இந்த திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் மாநிலங்களின் கல்வி நிர்வாகம் மற்றும் பாடத்திட்டங்களில் ஒன்றிய அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கும்.
நிதியை பெறுவதற்கு ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நெருக்கடி மாநிலத்தில் உரிமைகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிய அரசை “தமிழர் விரோத” மற்றும் “கல்வி உரிமையை மறுக்கும்” நடவடிக்கை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். நாடாளுமன்ற நிலைக்குழுக்களும் இந்த நடவடிக்கையை நியாயமற்றது என்று கண்டனம் தெரிவித்துள்ளன.

சிறப்பான மாநிலம்

கல்வி மற்றும் சமூகத்தளத்த்ல் சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை தண்டிக்கிறது, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்படுகின்றன. பாதிப்புகள்

இந்த நிதி நிறுத்தம் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தின் அரசு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிப் பணிகளை பாதிக்கும். ஆசிரியர்களின் ஊதியம், பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வி உபகரணங்கள் போன்றவற்றுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படலாம். இதனால், இந்த மாநிலங்களின் கல்வித் தரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *