பெங்களூரு, ஜூலை 6– பாஜக ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின் மோசடியை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை அமைத்து கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் கரு நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் 3.7.2023 அன்று செய்தியாளர்களிடம் கூறியது:
2021-ஆம் ஆண்டு முந்தைய பாஜக ஆட்சி யில் பிட்காயின் மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. மாநில அரசின் மின் கொள்முதல் இணையதளத்தில் சட்ட விரோத மாக ஊடுருவி ரூ. 11.5 கோடி பணத்தை எடுத்துவிட்டதாக சிறீ கிருஷ்ணா ரமேஷ் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தவிர, கிரிப்டோகரன்சி திருட்டு, போதைப் பொருள் கடத்தல், சைபர் மோசடி குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
எனவே பிட்காயின் மோசடி உள்ளிட்ட சம்பவம் குறித்து விசா ரிக்க சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.அய்.டி) அமைக்கப்பட்டுள் ளது. இதற்கு கூடுதல் காவல்துறைத் தலைவர் மனீஷ் கர்பிகர் தலைமை வகிப்பார்.
இந்தப் படையில் சைபர் வல்லு நர்களும் இடம்பெறுவர். சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி பிட்காயின் மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
சிறப்புப் புலனாய்வுப் படை நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த சிறப்புப் புலனாய்வு படை ஒன்றிய புலனாய்வுப் பிரிவு உள் ளிட்ட எவற்றின் உதவியையும் பெறவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதற்காக தனி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
சிறப்புப் புலனாய்வுப் படை தனது விசாரணையைத் தொடங் கிய பிறகே விசாரணைக்கு என் னென்ன தேவைப்படும் என்பது தெரியவரும். பிட்காயின் மோசடி குறித்து விசாரிக்க 2 நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அரசு செய்யத் தயாராக உள்ளது என்றார்.