அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை,நவ.14- சென்னை கீழ் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட் டுள்ள தீக்காய சிறப்பு பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தீக்காய சிறப்பு பிரி வில் சிகிச்சை பெற்று வருபவர்க ளிடம் நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணி யன் பேசியதாவது,
“தொழு நோயால் பாதிக்கப்பட் டவர்கள் எவ்வளவு பேர் இருக் கிறார்கள் என்பதை மாவட்ட வாரியாக கண்டறிந்து அவர்களுக் கான தீவிர சிகிச்சையும் வழங்கப் பட்டு வருகிறது. அது மட்டுமில் லாமல், அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அரசு சார்பில் உதவித் தொகை வழங்கும் அந்தப் பணியும் நடைபெற்று வருகிறது.
‘காச நோயில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை நோக்கியும் தமிழ் நாடு அரசு பல முன்மாதிரியான திட்டங்களை செய்து கொண்டி ருக்கிறது. அந்த வகையில் காச நோய் பாதிப்பு உண்டானவர்க ளுக்கு ஊட்டச்சத்து தருவதற்கு முதலமைச்சர் நூற்றுக்கும் மேற் பட்ட தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்கள் வாயிலாகவும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வரு கிறது. அரசின் சார்பில் உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகி றது.
பெரிய அளவில் இந்த இரு பாதிப்புகளும் இல்லாமல் குறைந்து வருகிறது என்பதை பார்க்க முடிகி றது. நிச்சயம் தமிழ்நாடு 2025-க்கு பிறகு தொழு நோய் பாதிப்பு இல்லா தமிழ்நாடு, காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கில் வெற்றி பெறும்.
DM, MCH உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் 100 விழுக்காடு இடங்களையும் ஒன் றிய அரசே நிரப்பும் என்று ஒன்றிய அரசு விதிமுறையை கொண்டு வந்தது. ஆனால் 50 விழுக்காடு இடங்களை மாநில அரசே நிரப் பிக் கொள்ள வேண்டும் என்ற அனுமதியை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று பெற் றுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு ஒதுக் கீட்டிற்கான 50 விழுக்காடு இடங் களில் தமிழ்நாடு அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் 25 விழுக்காடு இடங்களிலும் தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத் துவர்கள் மீதம் உள்ள 25 இடங் களிலும் சேர்க்கப்படுவர்.
ஆனால், முதுநிலை மருத்துவப் படிப்பில் கலந்தாய்வு முடிந்து காலியாக உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு அரசே கலந்தாய்வு நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை” என் றார்.
அதாவது இந்த ஆண்டு தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுவிக் மாண் டியாவை நேரில் சந்தித்த போது, இந்த ஆண்டு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் உள்ள 50 விழுக்காடு இடங்களை தமிழ்நாடு அரசே நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்திருந்தார்.
மேலும் வழக்கும் தொடரப் பட்டு அந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 விழுக் காடு இடங்களை தமிழ்நாடு அரசே நிரப்பிக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.