வருக, வருக என்றே அன்புடன் அழைக்கிறோம். ஆஸ்திரேலியாவில் அய்யாவின் கருத்து மழை பொழிந்து பெரியார் உலகமயமாதலுக்கு ஒரு பகுதியை உலகுக்குக் காட்டி விரைவில் மற்ற பகுதியிலும் பரவி விரைவில் பெரியார் உலகமயமாவார் என்பதை நிலை நிறுத்திய தங்கள் உழைப்பு எக்காலத்திலும் எல்லாராலும் நிச்சயம் பாராட்டப்படும்.
உலகு பெரியார் மயமாவதன் மூலம் தாங்களும், உலகமயமாகி வருவதை நீங்கள் ஏற்க மறுத்தாலும் உண்மை அதுதான் எங்கள் மகிழ்ச்சியும் அதுதான்.
எப்போதோ வெற்றிடம் வெற்றிடம் என்று கூச்சலிட்டார்களே – சென்ற சுமார் 16 நாட்கள்தான் எங்களுக்கு உண்மையான வெற்றிடம்.
பெரிய அளவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினாலும் ஓய்வு எடுக்காமல் இனி தாங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டே தீருவீர்கள்.
உடலுக்கு ஓய்வு தேவைதான் – தாங்கள் அறியாததல்ல. உடல் நலம் பேணுங்கள்.
உள்ளமெல்லாம் அன்பு நதியில் நனைவோம்.
ச. சோமசுந்தரம், தஞ்சாவூர் – 613 001