4.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைத்திட தமிழ்நாடு அரசு முடிவு, முதலமைச்சர் அறிவிப்பு.
* வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன் றத்தில் வழக்கு: முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின் உறுதி
* அரசமைப்பு சட்டத்தின் மீது விழுந்த அடி, வக்பு திருத்த சட்டம் குறித்து சோனியா காட்டம்.
* நாடாளுமன்ற ஒப்புதலின்றி கச்சத்தீவை இலங் கைக்கு விட்டு கொடுத்தது அரசியலமைப்புக்கு எதிரானது: மக்களவையில் டி.ஆர்.பாலு குற்றச் சாட்டு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை, நாடாளுமன்ற குழு குற்றச்சாட்டு.
* மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி, நள்ளிர வில் மக்களவையில் ஒப்புதல் பெற்றது மோடி அரசு.
* தெலுங்கானா அமைச்சரவையில் தற்போது இரண்டு பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே உள்ளனர். மேலும் கூடுதலாக இரண்டு பேர் நியமிக்க ராகுல், சோனியாவிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்.
* எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தையும் மீறி மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வக்பு திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் ஆதரவு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அன்சாரி விலகல்.
* 4000 சதுர கிமீ நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது: கூட்டாளி அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது, ராகுல் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அதிமுகவுடன் கூட்டணி உறுதி, அண்ணாமலை யிடம் பாஜக டில்லி தலைமை அறிவுறுத்தல்.
தி இந்து:
* ‘கேரளா, தமிழ்நாடு, வங்காளம் ஆகிய மாநிலங் கள் சமக்ர சிக்ஷாவுக்கு நிதி பெறவில்லை’, நாடாளுமன்ற குழு அறிக்கை.
* மூன்று மாநிலங்களுக்கும் முறையே ரூ.328.9 கோடி, ரூ.2,151.6 கோடி மற்றும் ரூ.1,745.8 கோடி ஒதுக்கப்பட்டது,
* ஆனால் நிதி விடுவிக்கப்படவில்லை என்று கல்வித்துறை இணை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதில்.
– குடந்தை கருணா