தருமபுரி, ஏப். 4- தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி நகர செயலாளரும், தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மிகவும் பற்றுக்கொண்டவரும், இயக்கம் நிகழ்சியில் தவறாமல் பங்குபெறும் உறுதிமிக்க தோழர் மு.அர்ச்சுனன் (வயது 41) உடல்நிலை சரியில்லாமல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் 31-03-2025 அன்று காலை 6:30 மணிக்கு மறைவுற்றார்.
மறைந்த அவருக்கு 31-03-2025 அன்று மாலை 03:30 மணிக்கு, தருமபுரி மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில், பக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன், தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன், அரூர் கழக மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், அரூர் பக மாவட்டத் தலைவர் சா.இராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் முன்னிலையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை ஒருங்கிணைப்பில்,
செந்தில்குமார் தருமபுரி பக மாவட்டத் தலைவர், பக இரு.கிருட்டிணன், மே.மா.செ பெ.கோவிந்தராஜ், நகர இளைஞரணி கண்.இராமச்சந்திரன், தருமபுரி பக மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்ததி, பக மாவட்ட அமைப்பாளர் தீ.அன்பரசு, மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன், கா.ஞானசேகரன், மு.பரமசிவன், தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராஜ், சிசுபாலன், வீ.சிவாஜி, கிருஷ்ணகிரி மாவட்டத் துணைத் தலைவர் வண்டி.ஆறுமுகம்,
இளைஞரணித் தலைவர் சீனிமுத்து இராஜேசன், பெங்களூர் இராஜா, காமலாபுரம் கோவிந்தராஜ், காமலாபுரம் இராமசாமி, இளைஞரணித் தலைவர் மா.முனியப்பன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, மா.சுந்தரம், வினோபாஜி, கா.காரல்மார்க்ஸ், ஊமை.காந்தி, மாரவாடி அசோக், நரசிம்மன், நகரத் தலைவர் கரு.பாலன்,
நகர செயலாளர் பழனி, மாரவாடி அசோக், பாப்பாரப்பட்டி சுப்பிரமணி, இர.கிருஷ்ணன், அரூர் கழக மாவட்ட துணைச் செயலாளர் வடிவேலன், துணைத் தலைவர் பூபதிராஜா, பக இ.சமரசம், மகளிர் பாசறை கல்பனா, உமா, மாணவர் கழக அரிகரன், மாணவர் கழக சஞ்சீவன், கிருஷ்ணகிரி ராகவேந்திரன் ஆகிய இயக்கத் தோழர்களும், ஊர் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துக்கொண்டு இயக்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் தவறாமல் பங்கெடுத்து, முரட்டு கொள்கைகாராகவும், தன்னுடைய இறுதி மூச்சு வரையிலும் கழகத்தின் கருஞ்சட்டை தோழனாக எவ்விடத்திலும் கொள்கைப் பிரச்சார பீரங்கியாக செயலாற்றிய செயல்வீரர் தோழர் மு.அர்ச்சுனன் அவர்களுக்கு மலர்வளையம் வைத்து கழக சார்பில் வீரவணக்கம் முழக்கமிட்டு, இயக்கத் தோழர்கள் அனைவரும் கடைசி வரையிலும் இருந்து இறுதி மரியாதை செலுத்தினர், பிறகு அவரை பிரிந்து வாடும் இயக்க குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, எக்காலத்திலும் உறுதுணையாக இயக்கம் சார்பாக இருப்போம் என்று உறுதியளித்தனர்.