செய்திச் சுருக்கம்

viduthalai
2 Min Read

வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது

12 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அங்கு நிறைவேறும் பட்சத்தில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவர் கையெழுத்திட்டால், சட்டம் நடைமுறைக்கு வரும்.

வக்ஃப் சொத்து என்பது என்ன?

வக்ஃப் சட்டம் 1995-இன் படி, எந்தவொரு முஸ்லிமும் தனது அசையும் மற்றும் அசையா சொத்துகளை தர்மம் அல்லது மத நோக்கத்திற்காக நிரந்தரமாக அர்ப்பணித்தால், அத்தகைய அர்ப்பணிப்பு வக்ஃப் என்றும், அத்தகைய சொத்து வக்ஃப் சொத்தும் எனவும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் வழங்கும் இந்த சொத்துகளை அச்சமூகத்தினரே நிர்வகிக்கின்றனர். இதற்காக ஒன்றிய, மாநில வக்ஃப் வாரியங்கள் உள்ளன.

டிரம்ப்பால் இந்தியாவிற்கு
ரூ.26,000 கோடி இழப்பு?

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 26 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு வேளாண், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இந்த கூடுதல் வரிவிதிப்பால் இந்தியாவிற்கு ரூ.26,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படும் என அவர்கள் கணித்துள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் ஆகும்.

எச்சரிக்கை!
எங்கெல்லாம் நிலநடுக்கம் ஏற்படும்?

வருங்காலத்தில் இந்தியாவின் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் கணித்துள் ளனர். குஜராத், இமாச்சல், ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் ரிக்டர் அளவு 9 என்ற வகையில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறுகின்றனர். டில்லி, அரியானா, மகாராட்டிராவில் ரிக்டர் அளவு 8. ராஜஸ்தானில் ரிக்டர் அளவு 7 மற்றும் கருநாடகா, தெலங்கானா, ஒடிசா, ஆந்திரா, ம.பியில் 7க்கும் குறைவான ரிக்டர் அளவில் பதிவாகும் எனவும் கணித்துள்ளனர்.

20 மாவட்டங்களில் மழை தொடரும்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *