தொழிலாளர் துறை எச்சரிக்கை
சென்னை, ஏப்.3- சென்னையில் உள்ள கடைகள், நிறுவனங்கள் வருகிற மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள் ளார்.
தமிழில் பெயர் பலகை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடந்த 1982-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது இந்த உத்தரவு அமலான சமயத்தில் மட்டும் தமிழில் பெயர் பலகை வைப்பதில் ஆர்வம் காட்டப்பட்டது. அதன்பின் னர் இந்த உத்தரவு கானல் நீர் போன்று ஆனது.
எனினும், தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம் என்று உள் ளாட்சி அமைப்புகள் சார்பில் அவ்வப்போது அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டு வருகிறது. அந்தவகையில் பெரு நகர சென்னை மாநகராட்சி எல்லைக் குட்பட்ட 15 மண்ட லங்களில் உள்ள கடைகள், வணிகம் மற்றும் உணவு நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக சென்னை 3-ஆம் வட்டம், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) சு.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப் பதாவது:-
அபராதம்
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறு வனங்கள் சட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் வைத்திருக்க வேண்டும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் கே.வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் சி.அ.ராமன், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் அ.யாஸ்மின் பேகம், இணை ஆணையர் (1)தே.விமலநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த பெயர்ப் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளில், அதா வது 5:3:2 என்ற விகிதாசாரப் படி அமைக்கப்பட வேண்டும்.எனவே அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள். வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளில் தமிழில் பெயர்ப் பலகையை வருகிற மே 15-ஆம் தேதிக்குள் வைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள், நிறுவ னங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி- கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.