விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிப்காட் சார்பில் ரூ.2 கோடி நிதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்
சென்னை, ஜூலை 7 சிப்காட் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் கொள் முதல் செய்ய ரூ.2 கோடி நிதியை அமைச்சர் உதயநிதியிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
இந்த ஆண்டு விளையாட்டு போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காவும், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காகவும், ஊரக பகு களில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட் டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப் பட உள்ளன.
இதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சிப்காட் நிறுவனம், நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் நிதியின் கீழ் 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக் கப்பட்ட ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு’ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.