சென்னை, ஏப். 2 திருச்சியில் ரூ. 290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு காமராசர் பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நூலகத்துக்கு காமராசர் பெயர்
சட்டமன்றத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று (1.4.2025) தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் (கும்ப கோணம்) பேசினார். அப்போது அவர் நூலகங்களுக்கு தலைவர்கள் பெயரை நம்முடைய முதலமைச்சர் சூட்டி வருகிறார். திருச்சியில் அமைய உள்ள நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட இருக் கிறது’ என்று பேசினார்.
அப்போது அவருக்கு பதில் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உறுப்பினர் அன்பழகன் தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கிற நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்க ளின் பெயர்கள் சூட்டப்பட் டிருக்கிறது என்ற கருத்தினை வெளிப்படுத்திக்காட்டியிருக்கிறார்.
அதிலே குறிப்பாக, பொதுப் பணித்துறை சார்ந்த 4 ஆண்டு சாத னைகள் தொடர்பான புத்தகத்தில், ஏற்ெகனவே இந்த அவையில் அறிவிக்கப்பட்டவாறு, திருச் சியில் 290 கோடி ரூபாய்செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.
தி.மு.க. அரசைப் பொறுத்த வரையில், கலைஞரால் கோட்டூர் புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்துக்கு அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறி விக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமானப் பணிகளை முடித்தோம். இது வரை சுமார் 16 லட்சம் பொது மக்களும், மாணவர்களும் இந்தநூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள்.
அதனைத்தொடர்ந்து, அண்மை யில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்ட போது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
அதே போன்று, திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத் துக்கு கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடுக்கி விடப் பட்டுள்ளன.
பொருத்தம்
கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். எனவே, தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று முதல மைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் வரவேற்றது. சட்ட மன்றத்தில் மானியக் கோரிக்கையில் பேசிய ரூபி மனோகரன் (நாங்குநேரி), ‘வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.