பணியிடங்கள் விவரம்: 1.ப்ராஜெக்ட் என்ஜினியர் (FTA -1) – 07 2. ப்ராஜெக்ட் என்ஜினியர் (FTA – 2) – 10 3. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA – 3) – 04 4. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA – 4) – 02 5. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA – 5) – 10 என 33 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியாளர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். சூப்பர் வைசர் (FTA – 4) பணிக்கு மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் கல்வி அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 32 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
ஊதியம்: ப்ராஜெக்ட் என்ஜினியர்: முதல் ஆண்டு – மாதம் ரூ.84,000, இரண்டாம் ஆண்டு ரூ.88,000 ப்ராஜெக்ட் சூப்பர்வைசர்: முதல் ஆண்டு மாதம் ரூ.45,000/, இரண்டாம் ஆண்டு ரூ.48,000- வழங்கப்படும்.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. இதர பிரிவினருக்கு ரூ.200 கட்டணம் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 16.04.2025 ஆகும்.
ஆர்வம் உள்ள பட்டதாரிகள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை படித்து விட்டு, தேவையான கல்வி தகுதி மற்றும் அனுபவம் இருப்பதை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment