அந்நாள் இந்நாள் (2.4.1903) இசையரசுத் தண்டபாணி தேசிகர் பிறந்த நாள் தீட்டாயிடுத்து! தீட்டாயிடுத்து!

viduthalai
1 Min Read

(இன்று இசையரசு தண்டபாணி தேசிகர் பிறந்த நாள்! அவர் தொடர்பாக திருவையாற்றில் நடந்த முக்கிய நிகழ்ச்சி பற்றி இங்கே)
கலைஞர் கருணாநிதி – ‘குடியரசு’, 09-02-1946

1946ல் திருவையாற்றில் நடை பெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் சித்தி விநாயகனே என்று பாடினாராம்.
அடுத்தப்படி கச்சேரி செய்ய வந்த அரியக்குடி ராமானு அய்யங்கார் ” தேசிகர்

தமிழ் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப் படுத்திவிட்டார். நான் இந்த மேடை யில் பாட மாட்டேன் ” என்று கூச்ச லிட்டு தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.
இது இன்றுநேற்றல்ல, மனுமந்தாதா காலத்திலிருந்து “தமிழ் பாஷை நீச்ச பாஷை” என்றும், “பிராமணாள் ஸ்நானம் செய்து விட்டு சாப்பிடும் வரை தமிழ் பேசக் கூடாது ” என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக் கூடாதென்றும் கூறி வந்ததோடு அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது. அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்து வந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது.

தமிழ்நாட்டிலே – தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே – தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு ஆங்கில அரசாங் கமல்ல – ஆரிய அரசாங்கத்தின் ஆணை!
தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகி விட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக – அனுமார்களாக வாழ்வது தான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது.

தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண் டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை அரியக் குடிவர்க்கம் அகம்பாவத்தோடு தான் வாழும். அரியக்குடிகள் அங்கலாய்ப்புக்கு அவர் இனபந்து காந்தி மகாத்மா(?)வின் விஜயமும் ஒரு காரணமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *