முகவை மாவட்டம், முதுகுளத் தூர் வட்டம், வெங் கலக் குறிச்சியில், 15.9.1907 அன்று பிறந்த பாலசுந்தரம் அவர்கள், சுயமரியாதை இயக்கத் திற்கு ஆற்றியுள்ள தொண்டு மிகப் பெரி யது. 1933இல் இயக்கத் தில் சேர்ந்த இவர் கவிஞ ராகவும், பேச் சாளராகவும், எழுத்தாளராகவும் எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறந்த செயல் வீரராகவும் நெடுங்காலம் பணி செய்தார்.
தந்தை பெரியார் அறிவித்த ஒவ்வொரு கிளர்ச்சியிலும் பங்கேற்றார். 1938 முதலாம் ஹிந்தி எதிர்ப்புப் போரின்போது எண்ணற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து தனித் தன்மை படைத்த தமது பேச்சாற்றலின் மூலமாக மக்களைத் தட்டியெழுப்பிய பாவலர்மீது அன்றைய ஆச்சாரியார் ஆட்சி ‘வகுப்பு வெறுப்பு’ குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தது. அதுபற்றி மக்களிடையே பேசிய பாவலர், “பிராமணாள் காபி கிளப், பிராமணாள் மட்டும் சாப்பிடுமிடம், பஞ்சமர்கள் உள்ளே பிரவேசிக்கக்கூடாது என்றெழுதி விளம்பரப் பலகைகள் தொங்கவிட்டிருப்போர் மீதும், சூத்திரன் தீண்டத்தகாதவன் என்று எழுதியும் பேசியும் வரும் கூட்டத்தார் மீதும், 153ஏ வகுப்புத் துவேஷ வழக்குத் தொடர வேண்டியதிருக்க, அவ்வாறு செய்யக் கூடாதென்று சொல் அளவிலே, சொல்லும் எங்கள் மீது 153ஏ சட்டத்தை, வீசுவது நீதியாகுமா?” என்று வினவினார். எனினும்,
3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இலக் கானார், தம் துணைவியார் பட்டு அம்மையாரையும் ஹிந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடுத்தினார். மாநாடுகளும் பொது நிகழ்ச்சிகளும் நிறைய, இவர் பொறுப்பில் நடந்துள்ளன.
‘தமிழ்அரசு’, ‘தென்சேனை’ இயக்க பத்திரிகை, ‘வாழ்வு’ (1.10.1960 முதல் 1.4.1963 வரையிலான இதழ்கள்).
ஹிந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு 3 ஆண்டுகள் தண்டனை பெற்று பின்னர் மேல் முறையீட்டில் 6 மாதமாகக் குறைக்கப்பட்ட பாவலர் பாலசுந்தரம், அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து, இராஜ மகேந்தரம் சிறையிலிருந்து 12.5.1939இல் விடுதலையானார்?
இவரின் கைவண்ணமான ‘பராசக்தி’ நாடகம் திரை ஓவியமாக உருமாற்றப் பெற்று உலாவந்து நாட்டையே கலக்கியது. (திரைக்கதை, வசனம் கலைஞர்)