காரைக்குடி – கழனிவாசல் கிராமம் புறவழிச்சாலையில் (சங்கராபுரம் பகுதிக்குட்பட்ட) அரசு முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம், சுற்றுச் சுவருடன் கட்டப்பட்டதின் வடகிழக்கு மூலைப் பகுதியில் தனியார் ஒருவரால் அரசு நிலம் ஆக்கிரமிப்புச் செய்து தனி நபர் ஒருவரால், சட்ட விரோத மாக கோவில் கட்டியுள்ளதை அப்புறப்படுத்தாமலும், அகற்றப்படா மலும் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகமே வைத்துள்ளனர். இது முற்றிலும் அரசு உத்தரவை மீறிய செயலாகும். இதனை உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலரும் மெத்தனப்போக்குடன் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும் ஆக்கிரமிப்பு கோவிலுக்கு இடத்தை ஒதுக்கி, காம்பவுண்டு சுவரை இடித்து புதுப்பாதையே அமைக்கப் படப்போவதாகவும் பேசப்படுகின்றது.
இச்செயல் எல்லாவற்றையும் விட மிக மிக மோசமான திட்டமாகும். இது பற்றிய புகார் மனு மாவட்டதி.க.தலைவர் ம.கு.வைகறை தலைமையில் மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி மாநகர துணை தலைவர் பழனிவேல் ராசன் ஆகியோர் கழக நிர்வாகிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கப்பட்டு பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
கழகத் தோழர்களின் இம்முயற்சி பாராட்டத்தக்கது – எடுத்த பணி வெற்றி பெறும் வரை பணிகள் தொடரட்டும்!