ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பிஜேபி பிரமுகர் கைது

Viduthalai
2 Min Read

விழுப்புரம், ஏப்.1- கள்ளக்குறிச்சியில் பொது மக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் மேனாள் பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கள்ளக்குறிச்சியில் பொதுமக்களிடம் ஏலச் சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் பகுதி யைச் சேர்ந்தவர் கள்ளக் குறிச்சி நகர மேனாள் பாஜக தலைவர் சூரிய மகாலட்சுமி. இவரது கணவர் சிவகுமார். பாஜக மாவட்ட தரவுத் தள மேலாண்மை மேனாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகக் கூறப் படுகிறது. இவர்கள் பொதுமக்களிடம் இருந்து ஏலச்சீட்டு, தீபாவளிச் சீட்டு என்று கூறி பல லட்சம் மதிப்பிலான பணத்தை மோசடி செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல் துறை யினர் மேற்கொண்ட விசாரணையில், சிவகுமாரும், சூரிய மகாலட்சுமியும் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு முதல் தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இவர் களிடம் 1 லட்சம் ரூபாய் சீட்டு முதல் 5 லட்சம் ரூபாய் சீட்டுக்கான தொகையை மாதம்தோறும் கட்டி வந்துள்ளனர். பணம் கட்டியவர்களுக்கு சிவகுமாரும், சூரியமகா லட்சுமியும் சரியாக பணத்தை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அவர்களை நம்பி ஏராளமான மக்கள் பணம் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு முதல் சீட்டு கட்டிய மக்களுக்கு சரியாகப் பணத்தைக் கொடுக்காமல் தாமதப் படுத்தியுள்ளனர். பொது மக்கள் இதுகுறித்து கேட் டால் அந்த தொகைக்கான வட்டியைத் தருவதாகவும், ஏலம் எடுத்த பணத்தை மொத்தமாக தருகிறோம் என்று கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டில் திடீ ரென சூரியலட்சுமி, சிவ குமார் இணையர் தலை மறைவாகியுள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட மக்களிடம் ரூ. 2 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 867 மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தலை மறைவான இணையரை காவல்துறையினர் தீவிர மாக தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. காவல் துறையினர் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *