ஆவடி, ஜூலை 7 – ஆவடி கழக மாவட்டத்தின் சார்பில் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 03.06.2023 அன்று நடை பெற்றது.
நிகழ்வில் மகளிரணி பொறுப்பாளர் சி.மெர்சி வரவேற்புரை ஆற்றி னார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் பூவை.செல்வி தலைமை யேற்றார். இன்றைய சூழலில் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு எந்த வகை யில் எல்லாம் பெண்க ளுக்கு எதிரான செயல் பாடுகளை செய்து வருகிறது என்றும், அதற்கான எதிர்வினையை நமது கழ கமும் தலைவரும் எந்த வகையில் எல்லாம் ஆற்றுகிறார்கள் என்பது குறித்தும், இந்த நிலையில் இயக்கத்தில் நமது பங்கு என்ன என்பது குறித்தும் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி சிறப்புரை ஆற்றினார்.
பெண்களின் பிரச்சி னைகளுக்கு எதிராக குரல் கொடுக்க அமைப் பாக இணைந்து பணியாற்றுவதின் அவசியத்தை குறித்தும், தொடர்ந்து நமது கழக மகளிரணி – மகளிர் பாசறையின் செயல்பாடுகள் பற்றியும் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதி வதனி சிறப்புரை வழங்கி னார். ஆவடி மாவட்டத் தலைவர் கார்வேந்தன், மாவட்ட செயலாளர் இளவரசன் மற்றும் ஆவடி மாவட்ட கழகத் தோழர்கள் ஆகியோர் கலந்துரையாடல் கூட் டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கி முன்னிலையேற்று சிறப்பித்தனர்.
வருகை தந்த மகளிர் தோழர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய் தனர்.
இறுதியாக மகளிர் பாசறை செயலாளர் செ. அன்புச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.