அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாடுகளின் பொருள்களுக்கு ஒரே மாதிரி வரி விதிப்பு

2 Min Read

அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாசிங்டன், ஏப்.1 அனைத்து உலக நாடுகளின் பொருள்கள் மீதான இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிப ராக 2-ஆவது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாடுகளின் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, இது தொடர்பாக உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

பாதிப்பு

இதனிடையே, ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்பால் நியாயமற்ற வகையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் 10 முதல் 15 நாடுகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.

பரஸ்பர வரி விதிக்கப்படும் நாளான ஏப்ரல் 2 அமெரிக் காவுக்கு விடுதலை நாள் என ட்ரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார். அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் வரிகளை சிறிதளவு குறைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

வருவாய்

மேலும் ட்ரம்ப் கூறும் போது, “அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடு களுடன் இனிமையாகவும் தாராளமாகவும் கனிவாகவும் இருப்பேன். பல தசாப்தங் களாக உலக நாடுகள் அமெரிக்காவிடம் காட்டிய தாராளத்தைவிட எங்கள் வரி விதிப்பு கனிவாக இருக்கும். வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நாடும் பாதிக்கப்படாத அளவுக்கு எங்கள் நாடு பாதிப்புக்குள்ளானது. ஆனால் உலக நாடுகளைப்போல் அல்லாமல் மற்ற நாடுகள் மீது இனிமையாக நடந்து கொள்வோம். இந்த நடவடிக் கையால் எங்கள் நாட்டுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்” என்றார்.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக துறை உயர் அதிகாரி பீட்டர் நவரோ கூறும்போது, “உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி மூலம் ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். இதில் வாகன இறக்குமதி மூலம் மட்டும் 100 பில்லியன் டாலர் கிடைக்கும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *