சென்னை, ஏப். 1- நாடு முழுவதும் 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 510 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் ஏப்.10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்கட்டமாக, நாடு முழுவதும் 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக, கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 1,461 உதவி ஓட்டுநர் பணி இடங்களும், தென் மத்திய ரயில்வேயில் 989 இடங்களும், மேற்கு ரயில்வேயில் 885 இடங்களும், தென் கிழக்கு ரயில்வேயில் 796 இடங்களும், கிழக்கு ரயில்வேயில் 768 இடங்களும், மேற்கு மத்திய ரயில்வேயில் 759 இடங்களும், கிழக்கு மத்திய ரயில்வேயில் 700 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தெற்கு ரயில்வேயில் 510 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அ்யடிஅ்ய டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்.10 முதல் விண்ணப்பிக்கலாம வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக் கலாம். மே 9ஆம் தேதி கடைசி நாள். அனைத்து ஆர்ஆர்பி இணையதளங்களிலும் இதற்கான முழு தகவலும் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போட்டித் தேர்வுகளுக்கு
இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு
இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு
அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் (1.4.2025) இலவச பயிற்சி வகுப்பு ஒளிபரப்பப்படவுள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராக இது உதவும்.
வங்கிகளில்
உரிமம் கோரப்படாத ரூ.46,222 கோடி
உரிமம் கோரப்படாத ரூ.46,222 கோடி
வங்கிகளில் உரிமம் கோரப்படாமல் இருக்கும் பணம் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் ரூ.18,380 கோடியும், 2020இல் ரூ.24,356 கோடியும், 2021இல் ரூ.31,078 கோடியும், 2022இல் ரூ.39,900 கோடியும் உரிமம் கோரப்படாமல் இருந்துள்ளது. இந்தத் தொகை கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.46,222 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தம் 18 கோடி கணக்குகளில் இந்தத் தொகை உரிமம் கோரப்படாமல் உள்ளது.
கிரிவல ஆபாசம்!
திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார் ஒருவர் நிர்வாணமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமன்றி, வெளிமாநில பக்தர்களும் கிரிவலம் செல்வது வழக்கமாகும். இந்நிலையில் அங்கு சாமியார் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சென்றார். இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியான நிலையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவருக்கு ஆடையை அணிவித்து அனுப்பி வைத்தனர்.
மியான்மருக்கு 60 டன் நிவாரணப் பொருள்
மியான்மரில் கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரை மட்டமாகின. அங்கு மீட்பு, நிவாரண பணிகளில் உதவுவதற்காக ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. அதன்படி, சி-17 ரக விமானங்களில் 60 டன் நிவாரண பொருள்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்திய ராணுவ குழுவில் பணியாற்றும் பெண் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிபுணர்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி – சென்னை
இடையே கூடுதல் விமான சேவை
இடையே கூடுதல் விமான சேவை
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தூத்துக்குடிக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க முன்வந்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே கரோனா காலத்தில் நிறுத்திய சேவையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் 2 பயண சேவையும், பெங்களூருக்கு ஒரு பயண சேவையும் வழங்கப்பட உள்ளது.
இன்று ‘ஏப்ரல் முட்டாள்கள்
நாள்’ ஏன் தெரியுமா?
நாள்’ ஏன் தெரியுமா?
உலகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டு வரை ஏப். 1 புத்தாண்டாக்க் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போதைய போப் கிரகோரி 8, ஜன. 1அய் புத்தாண்டாக அறிவித்தார். இதை அறியாத ஃபிரான்சு மக்கள், ஏப். 1அய் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். இதை அறிந்த மற்ற பகுதி மக்கள், ஃபிரான்ஸ் மக்களை கிண்டலடித்து கேலி செய்தனர். அப்போது முதல் ஏப்ரல் 1 உலக முட்டாள்கள் நாளானது.