பெரம்பலூர், ஜூலை 7- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.7.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில் பெரம்பலூர் குண கோமதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் மு. விஜயேந்திரன், நகரத் தலைவர் அக்ரி ந. ஆறுமுகம் நகர செயலாளர் அ.ஆதிசிவம் ,மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆசிரி யர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் நோக்கங்களை விளக் கிய தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் தலைமையேற்று பொதுக்குழு தீர்மானங்களின் சிறப்பையும், கொடி, செடி, படி என ஆசிரியர் அறிவுறுத்தி யதையும், குடும்பம் குடும்பமாக இயக் கத்தில் இணைந்திருப்பது குறித்தும், தெருமுனை கூட்டங்கள் சிறப்பாக நடத்த வேண்டியதன் அவசியம் குறித் தும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மாவட்ட அமைப் பாளர் பெ.துரைசாமி,ஆலத்தூர் ஒன் றிய தலைவர் ரவிக்குமார், வேப்பூர் ஒன் றிய அமைப்பாளர் அரங்கசாமி, பெரம் பலூர் ஒன்றிய செயலாளர் பிச்சை பிள்ளை,ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் அரங்க. வேலாயுதம் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் இரா. சின்னசாமி பெரியார் பெருந்தொண்டர் ராஜேந் திரன், இளைஞரணி அமைப்பாளர் இனியன், மகளிர் அணி பொறுப்பா ளர்கள் தங்க பொண்ணு மெர்சி சூரியகலா பாக்கியம்,பெரம்பலூர் நகர அமைப்பாளர் ஆ. துரைசாமி, அரிய லூர் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் செந்தில் சுந்தரமூர்த்தி பெரம் பலூர் வேல்முருகன், பெரியாரியப் பற்றாளர் த.வின்சென்ட், ம..எழிலரசன், சரவணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று இயக்கத்தை வலுப்படுத்த உறுதியற்றனர்.
ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்களை துடிப்பாக செயல்படுத்துவது எனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடும் வகையில் தெருமுனைக் கூட்டங்களை பெரம்பலூர் வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங் களில் சிறப்பாக நடத்திடுவதெனவும், பள்ளி கல்லூரிகளுக்கு முன்பாக வாயிற் கூட்டங்களை நடத்தியும், கழக வெளி யீடுகளைத் துண்டறிக்கைகளை வழங்கி யும் இயக்கத்திற்கு புதிய மாணவர்கள், இளைஞர்களை சேர்ப்பது எனவும், கிளைக் கழகம் தோறும் கழக இலட்சியக் கொடியை ஏற்றுவதெனவும், சுற்றுச் சூழலை காக்க செடி நடுவது எனவும், இனமானம் காக்கும் ஏடு விடுதலையை படித்து பரப்புவதெனவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.