பாதுகாப்பு அணிவகுப்பில் கார் வெடித்து சிதறியது ரஷ்ய அதிபர் உயிர் தப்பினார்

Viduthalai
1 Min Read

ரஷ்யா, மார்ச் 31- ரஷ்ய அதிபர் புதினின்பாதுகாப்பு அணி வகுப்பில் பயன்படுத்தப்படும் கார் திடீரென வெடித்து சிதறியது.இது அவரை கொலை செய்ய நடந்த சதி முயற்சியா? என்கிற சந்தேகத்தை திருப்பியுள்ளது

உலகளவில் அதிகப்படியான பாதுகாப்பில் இருக்கும் தலைவர்களில் ரஷ்ய அதிபர் புதினும் ஒருவர். அவரது உயிருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப் பதால் எப் போதும் உச்சக்கட்ட பாதுகாப்புடனே இருப்பார்.குறிப்பாக அவர் ஓர் இடத்துக்கு செல்கிறார் என்றால் சில வாரங்களுக்கு முன்பே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விடும். அத்தகைய பாதுகாப்பு நிறைந்த புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் ‘லிமோசின்’ என்ற காரும் உள்ளது.

கார் வெடித்து சிதறியது
ரஷ்யாவின் ஆரஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான இந்த கார் தலைநகர் மாஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த காரின் என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அதனைத் தொடர்ந்து கார் வெடித்து சிதறியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தின்போது புதின் அந்த காரில் பயணிக்கவில்லை என்பதால் நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். அதேபோல இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அதே சமயம் அதிபர் புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம் பெறும் கார் வெடித்துச் சிதறியது ரஷியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதின் விரைவில் இறந்துவிடுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதனால் கார் வெடிப்பு இந்த சம்பவம் புதினை கொலை செய்ய நடந்த சதியா? என்ற கோணத்தில் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணை நடந்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *