குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் பா செந்தில்வேல் கடலூர் மாவட்ட கழக மகளிர் அணி பொறுப்பாளர் சத்தியவதி ஆகியோரின் மகள் அறிவுமதி-புதுச்சேரி தவளக்குப்பம் பாலமுருகன் ஆகியோர் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி 31.3.2025 அன்று காலை 9 மணி அளவில் புதுச்சேரி என்டி மகாலில் நடைபெற்றது. மணமக்களை கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், கடலூர் மாவட்ட கழக காப்பாளர் அரங்க பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, கடலூர் மாநகர தலைவர் தென் சிவகுமார், துணைத் தலைவர் மணிவேல், துணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, அப்பியம்பேட்டை கிளை தலைவர் தனசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.