நாகர்கோவில், மார்ச்31- நாகர்கோவில் மாநகரம் மற்றும் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன், கழக வளர்ச்சிப்பணிகள், எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள், காப்பாளர்கள் ஞா.பிரான்சிஸ், ம.தயா ளன், கழக மாவட்ட துணைச் செயலாளர் சி. அய்சக் நியூட்டன், இளை ஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் அந்தோனி, கலைப்பிரியன் பெனடிக்ட் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்
தந்தை பெரியாருடைய கொள்கையை உலகமய மாக்க ஓயாது உழைக்கும் திராவிடர்கழக தலைவர் ஆகிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் பெரியாருடைய கருத்துக்களை பரப்பிவரும் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது,
சிதம்பரத்தில் நடை பெற்ற திராவிடர்கழகப் பொதுக்குழு தீர்மானங் களை முழுமனதாக ஏற்று வரவேற்று குமரி மாவட்டத்தில் செயல் படுத்துவது, கழக பொதுக்கூட் டங்கள் நாகர் கோவி லில் நடத்துவது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.