கன்னியாகுமரி, மார்ச் 31- பத்மநாபபுரம் நகரம் மற்றும் தக்கலை ஒன்றிய திராவிடர் கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் தக்கலை தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், கழக வளர்ச்சிப் பணிகள், எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சி.சுகுமாறன் கருத்துரையாற்றினர். தோழர்கள் வில்சன், அன்புராஜ் கலைப்பிரியன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்
தந்தை பெரியாருடைய கொள்கையை உலகமய மாக்க ஓயாது உழைக்கும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் பெரியாருடைய கருத்துகளை பரப்பிவரும் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது,
சிதம்பரத்தில் நடை பெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானங்களை முழுமன தாக ஏற்று வரவேற்று குமரி மாவட்டத்தில் செயல்படுத்துவது, கழக பொதுக்கூட்டம் தக்க லையில் நடத்துவது,
தக்கலை பேருந்து நிலைய பணியினை விரைந்து முடிக்க பத்ம நாபபுரம் நகராட்சியைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.