சென்னை, மார்ச் 30- சென்னை கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-2026ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 4ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தேர்வு அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்யும் சோக சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தேர்வு அச்சம் காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தர்ஷினி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனாலும் அவருக்கு கட் ஆப் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி, வருகிற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து தயாராகி வந்தார்.
இந்த சூழலில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தர்ஷினி, தேர்வு அச்சம் காரணமாக தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை கண்ணீர் பேட்டி
கடை கடையாக சைக் கிளில் சென்று சமோசா விற்று என் மகளை நீட் தேர்வுக்கு படிக்கவைத்தேன் என தற்கொலை செய்த மாணவி தேவதர்ஷினியின் தந்தை செல்வராஜ் கண்ணீருடன் தெரிவித்தார்.
4 ஆண்டு படிக்க வைத்து விட்டேன்.இனிமேல் என்ன கஷ்டம். இன்னும் ஒரு மாதம் தானே. தைரியமாக இரு, எதுவாக இருந்தாலும் அப்பா நான் பார்த்துக் கொள்கிறேன்.யார் என்ன சொன்னாலும் கேட்காதே என்றேன். நான் கஷ் டப்பட்டு சைக்கிளில் பெட்டி கட்டி கடை கடையாக சென்று சமோசா விற்று என் மகளை நீட் தேர்வுக்கு படிக்க வைத்தேன். இதற்காக கோயம்பேடு, கிளாம் பாக்கம் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளுக்கு சைக்கி ளில் சென்று சமோசா போட்டு வந்தேன்.
நீட் தேர்வுக்காக ரூ.2 லட் சம் என 4 முறை பணம் கட்டி கடைசியாக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, தனியார் பயிற்சி நிறுவனத்துக்கு கட்ட ணத்தை செலுத்தினேன். சமோசா விற்றுவிட்டு வரும் போது என் மகளுக்கு மிக வும் பிடித்த சுவீட் பணியா ரம் வாங்கிவிட்டு வந்தேன். ஆனால் அதற்குள் என் மகள் உயிருடன் இல்லை.
இன்னும் எத்தனை உயிர் கள் போகும் என தெரிய வில்லை. நீட்டைரத்துசெய் யுங்கள். என் மகள் படித்து என்னை தூக்கி விடுவாள் என பார்த்தேன். ஆனால் அவளே என்னை விட்டு போய்விட்டாள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.