டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ் நாடெங்கும் நேற்று (29.3.2025) கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் பங்கேற்றனர்.
* அதிமுகவை உடைக்க முயற்சிக்கிறதா பாஜக? அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் தனி சந்திப்பு எதிரொலி.
* மோகன்லால் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடும் ‘எம்புரான்’ படத்தில் குஜராத் 2002 கலவரம் குறித்த காட்சிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திப் போட வேண்டும், தெலங்கானாவில் கூட்டிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் தீர்மானம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராம நவமி: உத்தரப்பிரதேச அரசு அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் ராமசரிதமானஸ் ஓத உத்தரவு. இறைச்சி விற்பனைக்கு தடை.
* சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி குறித்து எடப்பாடியார் டில்லி சென்று அமித் ஷாவுடன் பேசியதாக கசிந்த தகவலை அடுத்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சாத்தியமான கூட்டணிக்காக நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் அதிமுக முறைசாரா பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளதாக தகவல்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* யு.ஜி.சிக்கு அதிகாரம் இல்லை: பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த யுஜிசி விதிமுறை கள் சிறுபான்மை நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தி இந்து:
* காந்தியாரைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்திய கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக அய்க்கிய முற்போக்கு முன்னணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (MGNREGA) மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.
< மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பின்னால்
ஆர்.எஸ்.எஸ் இருப்பதால் மோடி நாக்பூருக்கு வருகை தருகிறார் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வதேட்டிவார் ஏளனம்.
< ரூ.16 லட்சம் கோடி கடன் ரத்து; இந்திய வங்கி துறையின் நெருக்கடிக்கு பாஜக அரசின் தவறான பொருளாதார மேலாண்மையே காரணம், ராகுல் காந்தி கடும் தாக்கு
– குடந்தை கருணா