தஞ்சையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சாவூர், நவ. 14– திராவிடர் கழக இளைஞரணி மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர் அன்னை அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் நவம்பர் 5 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் முனைவர் ராஜவேல் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி துணைச் செய லாளர் இரா.வெற்றி குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி அமைப் பாளர் வழக்குரைஞர் ஆ.பிர பாகரன் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் இளைஞரணி தோழர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என் பது குறித்தும், இளைஞரணியை வலுப்படுத்துவதற்கான காரணங்களையும் விளக்கிப் பேசினார்.
கழகக் காப்பாளர் மு.அய் யனார், தஞ்சை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித் துப் பேசினர்.
நிறைவாக கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின் சுனாரெசு பெரியார் கருத்துரை ஆற்றினார். அப்போது இளை ஞரணி செயல்பாடுகள் குறித் தும், சமூக ஊடகங்களில் இளை ஞர் அணியினர் செயல்படைய வேண்டிய விதங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் கள் சென்னை சோ.சுரேஷ், நாகை நாத்திக.பொன்முடி, செந்துறை சு.அறிவன், திண்டுக் கல் நா.கமல்குமார், ஆத்தூர் ப.வேல்முருகன், தாராபுரம் ஆ. முனீஸ்வரன், ஜெகதாபட்டினம் ச.குமார், கோபி ப.வெற்றிவேல், பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்தி ராபதி, மாவட்ட ப.க பொறுப் பாளர் வீரக்குமார், விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.ஜி மணிகண்டன், அரியலூர் ஒன் றிய இளைஞரணி செயலாளர் கி.கமலக்கண்ணன், மணல் மேல்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ.யோவான், தஞ்சை மாநகர இளைஞரணி பொறுப் பாளர்கள் மணிகண்டன், பிர காஷ், பெரியார் பிஞ்சு முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தின் முடிவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திண்டிவனம் வழக்குரைஞர் தா.தம்பி பிர பாகரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், உலகத் தலை வர் தந்தை பெரியார் அவர்க ளின் கொள்கைகளை உலகமய மாக்கும் பணியில் ஓயாது உழைத்து வரும் தமிழர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்தநாள் விழாவை (சுயமரியாதை நாள்) 2023 டிசம்பர் 2 ஆம் நாள் தொடங்கி மனிதநேய பணிகளான குருதிக் கொடை வழங்குதல், உடற் கொடை வழங்குதல், மருத்து வமனை உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருள் வழங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நமக்கு அளித்த தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தல், கழக கொடியேற் றுதல், கொள்கை விளக்க பிரச் சாரக் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வதெனவும்,
விஸ்வகர்மா யோஜனா என்னும் பெயரில் மீண்டும் குலக்கல்வியை திணிக்கும் ஒன் றிய அரசின் நவீன தீண்டா மைக்கு எதிராகவும், குலக்கல் வித் திட்டத்தின் ஆபத்துகளை விளக்கி கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும், கழக இளை ஞரணி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப் பாளர்கள் தங்கள் பொறுப் புக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல் கூட்டங் களை நடத்தி கிராம கிளை, ஒன்றிய அமைப்பு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதி களில் வட்டக் கழக வாரியாக இளைஞர் அணி அமைப் புகளை வலுப்படுத்தி முழு வீச்சுடன் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். மேலும், மாநில, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் புதிய இளைஞரணி அமைப்புகளை தங்கள் பகுதிகளில் உருவாக்கி இளைஞரணி அமைப்பை பர வலாக்கிட வேண்டும். மேலும், கழக இளைஞரணி பொறுப் பாளர்கள் அந்தந்த மாவட்டங் களில் நடைபெறும் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்கும் மாணவர்கள் இளைஞர்களின் முகவரி மற் றும் தொலைபேசி எண்களை பெற்று அவர்களை தொடர்பு கொண்டு இயக்க நடவடிக்கை களில் பங்கேற்க செய்வதென வும், ஜாதி ஒழிப்பும் -தீண்டாமை ஒழிப்போம் நமது கண்ணான கொள்கை. ஜாதி தீண்டாமைப் போன்ற கொடுமைகள் எந்த பகுதியில் நடந்தாலும் கழக இளைஞரணி தோழர்கள் உட னடியாக தலைமைக் கழகத் திற்கு தெரிவித்து களப்பணியில் உடனடியாக இறங்க வேண்டும் எனவும், தீண்டாமை சட்டப் படி குற்றம். மனிதாபிமானத்திற் கும் மனித உரிமைக்கும் எதி ரானது என்பது போன்ற விளம் பரங்களை கழக இளைஞரணித் தோழர்கள் தமிழ்நாடு முழு வதும் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜாதி – தீண்டாமை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, சமூக மாற்றம் பற்றி தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டிய பிரச்சனை யும் கூட என்பதை உணர்ந்து கழக இளைஞரணியினர் முனைப் புடன் செயல்படுவதனவும், கழக இளைஞரணி சார்பில் பெரியார் சமூக காப்பணி பயிற்சி பட்டறை அறிமுக வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் கீழ்க்கண்டவாறு நடத்துவதெனவும் தீர்மானிக் கப்படுகிறது:
பெரியார் சமூக காப்பணி பயிற்சி வகுப்பு பட்டியல்:
டிசம்பர் – 9, 10 – வடசென்னை, கும்மிடிப்பூண்டி,ஆவடி, சென்னை
டிசம்பர் 16- 17 – திருவொற்றியூர், தென்சென்னை, சோழிங்கநல்லூர், தாம்பரம் .
டிசம்பர் 30, 31 – செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை.
ஜனவரி 6, 7 – வேலூர், செய்யாறு, திருப்பத்தூர்.
ஜனவரி 20, 21 -திண்டிவனம், விழுப்புரம், கல்லக்குறிச்சி, திரு வண்ணாமலை.
ஜனவரி 27, 28 – கடலூர், சிதம்பரம்,விருத்தாசலம், புதுச்சேரி.
பிப்ரவரி 3,4 – ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர்.
பிப்ரவரி 10, 11 – சேலம், ஆத் தூர்,மேட்டூர் , நாமக்கல்.
பிப்ரவரி 17, 18 – மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை.
பிப்ரவரி 24, 25- மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர்.
மார்ச் 2, 3 – அரியலூர், பெரம் பலூர், லால்குடி.
மார்ச் 9 , 10 – திருச்சி, துறையூர், கரூர்.
மார்ச் 16, 17 – ஈரோடு, கோபி, மேட்டுப்பாளையம், நீலகிரி.
மார்ச் 23, 24 – தாராபுரம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி.
மார்ச் 30, 31 – புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாதபுரம்.
ஏப்ரல் 6, 7 – சிவகங்கை, காரைக் குடி.
ஏப்ரல் 13 , 14 – திண்டுக்கல், பழனி, கம்பம், தேனி.
ஏப்ரல் 20, 21 – மதுரை மாநகர், மதுரை புறநகர், ராஜபாளையம், விருதுநகர்.
ஏப்ரல் 27, 28 – குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி.
கழக மாவட்டத்திற்கு 5 முதல் 10 தோழர்களை பங்கேற் கச் செய்திட வேண்டுமெனவும், கழக இளைஞரணி சார்பில் 2023 டிசம்பர், 2024 ஜனவரி மாதத்தில் திருச்சி, சென்னை, புதுச்சேரி, தர்மபுரி, ஈரோடு, திருவாரூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய ஊர்களில் களப்பணி பயிற்சி முகாம்கள் நடத்துவதெனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வயதை குறைத்திடும் வகையில், தஞ்சை மாவட்ட இளைஞரணி சார் பில் தஞ்சை மாநகரில் 91 அடி உயர கொடிக்கம்பம் நிறுவி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கழகத் தின் லட்சியக்கூடிய ஏற்றுவதெ னவும், தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞரணி சார்பில் விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்குவதெனவும் தீர்மானிக் கப்பட்டது.
புதிய பொறுப்பாளர்:
கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.பிரகாஷ் – பெரியபாளையம்.