கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வன் கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் பதியப்படும் வழக் குகள் ஆறு விழுக்காடு குறைந்தது – முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் தகவல்.
இணைப்பா பிரிப்பா?
ஹிந்தி மூலம் இணைப்பு ஏற்படுத்த விரும்புகிறோம் – வேலு நாச்சியார் நினைவு நிகழ்ச் சியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.
இந்த பேச்சு இணைப் புக்கானது அல்ல – மாறாக பிரிப்புக்கான வேலை.
அப்பா – மகன்
இரண்டாம்
இடத்துக்கு போட்டி
மகன்: தமிழ்நாடு தேர்தலில் இரண்டாவது இடம் யாருக்கு என்பதில் தான் போட்டி என்று தக வல் வெளிவந்து கொண் டிருக்கிறதே அப்பா!
அப்பா: ஆக முத லிடம் திமுகவுக்கு தான், அதுதான் ஆட்சியைப் பிடிக்கும் என்பதை எதிர்க்கட்சிகளே ஒப்புக் கொண்டு விட்டன என்பது தெரியவில்லையா மகனே!
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் பெட் ரோல் மற்றும் டீசல் விலை இன்று (மார்ச் 30) அதிகரித்துள்ளது. அதன் படி, நேற்று (மார்ச் 29) ஒரு லிட்டர் ரூ.100.90க்கு விற்பனையான பெட் ரோல் இன்று 0.13 காசுகள் உயர்ந்து ரூ.101.03க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று ஒரு லிட்டர் ரூ.92.49க்கு விற்பனையான நிலை யில், இன்று 0.12 காசுகள் உயர்ந்து ரூ.92.61க்கு விற்பனையாகிறது.
பணத்தைப் பறிக்கும்
பாஜக அரசு
ஒன்றிய அரசு, வங்கி களை வசூல் ஏஜென்ட் நிலைக்கு கீழிறக்கி, மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகிறது. 2018 – 2024 வரை வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று, 43,500 கோடி ரூபாய் வசூலித்தனர். தற்போது ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி யுள்ளனர்.
–மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்
வானிலை தகவல் தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
சென்னை, மார்ச் 30 தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயில் இருந்துவரும் நிலையில் அடுத்த அய்ந்து நாள் களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங் களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
குறைந்தது
Leave a Comment