சென்னை, மார்ச் 29 காந்தியாரைப் பிடிக்காதவர் களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய
ரூ. 4,034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று (29.3.2025) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
“காந்தியாரைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரி லான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளா தாரத்தின் முதுகெலும்பாக, குருதி ஓட்டமாக அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு!
உங்களுக்கு ‘வேண்டப்பட்ட’ கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக்கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் ஊதியப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் தில்லியை எட்டட்டும்! பாசிச பாஜக அரசின் மனம் இரங்கட்டும்!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.