எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை – சொத்தை யெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால் இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். பொதுமக்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும் – மருத்துவ மனைக்கும் வழங்கினேனே தவிர என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.