மதுரை, மார்ச் 29- மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் 23-03-2025 ஞாயிறு மாலை 6 மணிக்கு மதுரை சிந்தனை மேடை சார்பாக அன்னை மணியம்மையார் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளை நினைவுகூரும் விதமாக நடைபெறும் கூட்டத்தின் நோக்கம் பற்றியும் சிறப்புரையாளர் ஜெ.வெண்ணிலா மகேந்திரன் அவர்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டு தலைமைச்செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.
அனைவரையும் வரவேற்றுப் பேசிய புறநகர் மாவட்ட மகளிரணி தலைவர் பெ. பாக்யலட்சுமி பெரியாரின் ஆணையை நிறைவேற்றும் விதமாக அனனை மணியம்மையார் நடத்திய இராவண லீலா குறித்து எடுத்துக் கூறினார்.
கூட்டத்தினை கழகப் பேச்சாளர் அ.வேல்முருகன்-சுசிலா இணையரின் மகளும் மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அ.வே.கனிமொழி. அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவுநாள் நடத்தப்படும் நோக்கத்தை எடுத்துக்கூறி முழுமையாக நிகழ்வினை ஒருங்கிணைத்தார். நிகழ்விற்கு தலைமையேற்ற மகளிரணி தலைவர் க.நாகராணி அன்னை மணியம்மையாரின் இயக்கப்பணி குறித்து எடுத்துக்கூறினார்.
நிகழ்வில் முனைவர் நேரு,சொர்ணத்தின் மகள் அறிவுமதி,திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோர் கருத்துரைத்தனர். அ.வேல்முருகன் மேடைப்பேச்சுக்கு ஏற்படும் பயம் குறித்தும் அதை நீக்கி மேடையில் பேசுவதற்கான குறிப்புகளையும் அவைக்கு கொடுத்தார்.சிறப்புரையாற்றிய உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா அவர்களுக்கு வே.சுசிலா க.நாகராணி அவர்களுக்கு சுமதிசெல்வம், பாக்யலட்சுமிக்கு லதாமுருகானந்தம், ராக்கு அவர்களுக்கு லதாதனுஷ்கோடி, அறிவுமதிக்கு கவுசல்யா மோதிலால், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அ.வே.கனிமொழிக்கு மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் ஆகியோர் ஆடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய அன்னை ஈவெரா.மணியம்மையாரின் தொண்டறம் என்னும் நூலின் நுணுக்க வுரையை இரண்டாவது பொழிவாக பல்வேறு வாழ்வியல் எடுத்துக்காட்டுகளோடு இணைத்து ஜெ.வெண்ணிலா மகேந்திரன் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில செயலாளர் சுப.முருகானந்தம்,பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.மகேந்திரன், ப.க.மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ், மாவட்டச் செயலாளர் வீர.பழனிவேல்ராஜன், அமைப்பாளர் பா.சடகோபன், பெரியார் பெருந் தொண்டர் வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி, புதூர் பாக்கியம்,செல்லத்துரை,இரமேஷ், பெத்தானி யாபுரம் பாண்டி, ஜேஎஸ்.மோதிலால், மசு.மோதிலால், ஜெயிலர்கலையரசன்,க.அழகர், பெரி.காளியப்பன், அழகுப் பாண்டி, மாவட்ட துணை தலைவர் பொ.பவுன் ராஜ், இரா.திருப்பதி, எபினேசர், துணை செயலாளர் க.சிவா, தனுஷ்கோடி, பேக்கரி கண்ணன் இளைஞர் அணி அமைப்பாளர் ச.வேல்துரை,அன்புமணி சுந்தர்ராஜன், ஒத்தக்கடை பெரியசாமி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் தேநீரும், பிஸ்கட்டும் நிறைவில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் த.இராக்குதங்கம், தான் இயக்கத்தில் தன்னுடைய இணையர் தங்கத்தால் சேர்க்கப்பட்டது, குறித்தும் முதன் முதலில் கருப்புச்சேலை தன்னுடைய உழைப்பில் எடுத்தது உள்ளிட்ட தன் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறி நன்றி கூறினார்.