சென்னை, மார்ச் 29- அன்னை மணியம்மையார் நினைவு நாளில், அவர் தடம் பதித்த வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களுக்கு ”திரா விட நடை” எனும் பெயரில் நடந்து சென்று அந்தந்த இடங்களில் அந்தந்த சம்பவங்கள் நினைவு கூரப்பட்டன. இந்நிகழ்வினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் மற்றும் திராவிடப் பள்ளி ஆகிய அமைப்புகள் ஒருங்கி ணைத்தன.
திராவிட நடையின் சிறப்பு!
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் 2014 ஆம் ஆண்டு முதல் ”சென்னை நடை” எனும் பெயரில் தொடர்ந்து நடைப்பயண நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன. இது ”மயிலாப்பூர் நடை” எனும் தலைப்புகளில் கோயில்களைச் சுற்றி பார்ப்பனர்கள் நடத்தி வந்த நிகழ்வுகளுக்கு மாற்றாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சென்னை மாநகரின் வளர்ச்சியில் நூறாண்டுகளுக்கும் மேலாக திராவிடர் இயக்கத்தின் பங்கு பற்றி விரிவாக விளக்கி அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நடை குறிப்பாக திரா விடர் இயக்கத்தின் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள், சென்னை நாள், நீதிக்கட்சியின் தொடக்கநாள் போன்றவற்றின் போது நடைபெறும். அந்தத் தலைவர்கள் வீடுகள், போராட்டம் நடைபெற்ற இடங்கள், போராட் டங்களுக்கு காரணமான இடங்கள், இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற இடங்கள் ஆகியவற்றை நேரில் கண்டு அதன் சிறப்புகளைக் குறித்து கலந்து ரையாடல் நடத்துவது இதன் நோக்கம்.
சிம்சன் பெரியார் சிலை முதல் பெரியார் திடல் வரை!
அந்த வரிசையில் திராவிடப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வாக திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக அன்னை மணியம்மையார் நினைவு நாளான 16.03.2025, ஞாயிற் றுக்கிழமை அன்று, அதிகாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள, ”தந்தை பெரியார் சிலை”யில் தொடங்கி, மீரான் சாகிபு தெருவில் உள்ள, ”பெரியார் மாளிகை”, அண்ணா சாலையில் உள்ள, ”தலைமை அஞ்சல் அலு வலகம்”, அண்ணா சலையில் திராவிடர் கழகத்தின் சார்பில், ”கலைஞர் சிலை” வைக்கப்பட்டிருந்த இடம், அண்ணா மேம்பாலத்தின் அருகில் உள்ள, ”தந்தை பெரியார் சிலை”, இறுதியாக, ”பெரியார் திடல்” என அய்ந்து இடங்களுக்கு நடைபயணமாகச் சென்றனர்.
மீரான் சாகிபு தெருவும் அன்னை மணியம்மையாரும்!
திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கும் பணியிலும், வெற்றிச் செல்வன் நிகழ்வை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளராக புதிய குரல் பொறுப்பாளர் தோழர் ஓவியா இந்த திராவிட நடையில் கலந்து கொண்டு, மீரான் சாகிபு தெருவில் சிறிய வயதில் அன்னை மணியம்மையாரைப் பற்றி தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பெரியார் மாளிகை பராமரிப்பாளர் தோழர் சோலையனும் இந்நிகழ்வில் உற்சா கத்துடன் கலந்து கொண்டார்.
தவிர்க்கவே முடியாத தலைவர் அன்னை மணியம்மையார்!
நிகழ்ச்சியில் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்தை அறக்கட்டளையாக மாற்ற பெரியார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் அதில் மணியம் மையார் பங்கு, பெரியார் – அன்னை மணியம்மையார் திருமணம் போன்றவை, மீரான் சாகிபு தெருவில் நின்று விரிவாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அண்ணா சாலையில் இருக்கும் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று மாநில உரிமைக்காக அன்னை மணியம்மையார் வீரியத்துடன் போராடியதை நினைவு கூர்ந்தனர். அதற்காக அவர் மீது வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அண்ணா சாலை யில் திராவிடர் கழகம் சார்பில் கலைஞருக்கு வைக்கப்பட்ட சிலை இருந்த இடத்தில் நின்று, அந்த சிலை வைக்கப்பட்டு, பின்பு எடுக்கப்பட்டது வரையி லும் ஏராளமான அரிய வரலாற்றுத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகிய அறுவரின் வரலாறும் ஒருமித்து பின்னிப்பிணைந்து இருந்தது பற்றி விளக்கமாக பேசப்பட்டது. இதில் ஏராளமான துணைக் கேள்விகள் எழுப்பப்பட்டு அனைத்திற்கும் பதில்கள் வழங்கப்பட்டன.
அடுத்து அண்ணா மேம் பாலத்தின் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு சென்று அங்கும் அன்னை மணியம்மையார் பற்றி எடுத்து ரைக்கப்பட்டது. அந்த சிலை திறப்பு விழாவில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் தொடர்பான விவாதங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டு, அதற்கான தரவுகளாக விடுத லையில் வந்த செய்திகள் நகல்கள் மூலம் காட்டப்பட்டது. இறுதியாக அங்கிருந்து பெரியார் திடலுக்கு வந்து, அன்னை மணியம்மையாரின் இராவணலீலா போராட்டம், மிசா கால நெருக்கடிகள் தொடர்பான பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் நினைவு கூரப்பட்டன.
பெரியாரின் மறைவு, அதற்குப் பிறகு அன்னை மணியம்மையார் முன்னெடுத்த, ”உறுதி ஏற்பு நாள்” நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகள், இயக்கத்தை வழி நடத்திய விதம், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைவராக இருந்து சாதனை படைத்தது போன்ற பல்வேறு அரிய வரலாற்றுக் குறிப்புகள் விளக்கப்பட்டன. தொடர்ந்து திராவிடர் கழகம் முன்னெடுத்த அன்னை மணியம் மையார் நினைவு நாள் நிகழ்விலும் திராவிட நடையில் பங்கெடுத்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
நடைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்கள்!
திராவிடப் பள்ளித் தோழர்கள் அரங்கநாதன், மணி பிரகாஷ், ஹரி, பரமேஸ்வரன், ஜோதி, ஜெயச்சந்திரன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தோழர்கள் வெற்றிச்செல்வன், இராகிலா, பெரியார் பிஞ்சு யாழிசை, முத்துக் குமார், சரவணன், திராவிடர் கழகம் சார்பில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல், புதிய குரல் சார்பில் தோழர் ஓவியா, ஊடகவியலாளர் ஜீவ சகாப்தன், உதயகுமார், கலையரசி, வசுமதி, கார்த்திகேயன் மற்றும் கவுரா பதிப்பகம் ராஜ சேகரன், காமாட்சி ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு இடத்திலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட புனைவுகளற்ற வரலாற்றுத் தகவல்களால் திராவிடர் இயக்கப் பற்றாளர்களாக இருப்பதே பெருமை; பெரு மிதம் என்ற உணர்வு தோன் றிட தோழர்கள், ”இந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை நேரம் சிறப்பாக கடந்தது” என்று ஒருங்கிணைப்பாளர்களுக்கும், வரலாற்றை விவரித்த கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாருக் கும் நன்றி தெரிவித்த வண்ணம் கலைந்து சென்றனர்.