கருணாமூர்த்தி உன் கடவுள் என்றால் கொடுவாளும், அரிவாளும், வேலும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொழுவும், கொட்டாப்புளியும் எதற்கு? இது காட்டுமிராண்டிக் காலச் சங்கதி தவிர வேறு என்ன? கஞ்சா, அபின், கள், சாராயம், கொள்ளை, கொலை எல்லாம் உன் கடவுளுக்குத் தேவையாயிருக்கிறதே? அப்புறம் திருடர்களுக்கும், இக்கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? சிந்திக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’