கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.7.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பொது சிவில் சட்டத்தை அவசரமாக நிறைவேற்று வதற்கு முன், அனைவருக்கும் முதலில் சமமான நீதி கிடைக்கட்டும் என்கிறது தலையங்க செய்தி.
* தகவல் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்தை அறிந்து நிறைவேற்ற வேண்டும் என்கிறது இன்னொரு தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களை சிபிஅய், அமலாக்கத் துறை மூலம் மோடி அரசு மிரட்டி வருகிறது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவில்லை; அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத போக்கோடு மதத்தை, சனாதனத்தை இன்றைக்கு மக்களிடத்தில் திணித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்.
* மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதிக் காததால், நாடாளுமன்ற உள்துறை குழு கூட்டிய கூட்டத் தில் இருந்து திக் விஜய் சிங் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் வெளிநடப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முந்தைய பாஜக ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் பெற்ற ஊழல் விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட கருநாடக காங்கிரஸ் அரசு முடிவு.
தி இந்து:
* பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று யுஜிசியிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
* மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கான முன் மொழியப்பட்ட வெளியேறும் தேர்வை (நெக்ஸ்ட்) மறுபரி சீலனை செய்ய இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை.
தி டெலிகிராப்:
* புனேவுக்கு அருகில் உள்ள தலேகானில் உள்ள டி.ஒய்.பாட்டீல் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, ஹர் ஹர் மகாதேவ் என கூச்சலிட்டு, சங் பரிவார் கும்பல், பள்ளியின் தலைமை ஆசிரியரை தாக்கினர்.
– குடந்தை கருணா