சிங்கப்பூர் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை
மனிதநேய சேவைகள் செய்தால் வாழ்க்கைத்தரம் உயரும் என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த தேசியச் சமூக சேவை மன்றம் பல ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்நாள் மற்றும் நற்பண்புகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளில் தொண்டறத்தில் ஈடுபடுவோரின் வாழ்க்கைத்தரம் தொண்டூழியம் செய்யாதோரைவிட ஒன்றரை மடங்கு நன்றாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளது.
தொடர்ந்து தொண்டூழியம் செய்வோர் சமூகத்தினருடன் அணுக்கமான உறவு கொள்ளமுடிவதாகவும் மனநலம் சிறப்பாய் இருப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கை தொடர்பாக பேசிய சிங்கப்பூர் பிரதமர் ஜெங் ச்வீ கியேட் (Heng Swee Keat) – மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தொண்டறத்தைப் பேணி வளர்க்கச் சமூக சேவை அமைப்புகளுடனும் தன்னிச்சையாகவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து தொண்டு செய்யும் போது மனநிறைவு ஏற்படும். இதன் மூலம் ஈகோ, மற்றும் தாழ்வு மனப்பான்மை அகலும். இதுவே பல மனம் தொடர்பான நோய்க்கு அருமருந்தாக இருக்கிறது. இதன் மூலம் உடலும் உறசாகமாக மாறுகிறது. வாழ்நாளும் அதிகரிக்கும் – என்று கூறினார்.