நாடாளுமன்றத்தில் சசிதரூர் எம்.பி. உரையிலிருந்து சில ‘வரி’கள்

1 Min Read

பெட்ரோலுக்கு வரி விதித்தீர்கள், எங்கள் ஆடைகளுக்கும் வரி விதித்தீர்கள். எங்கள் காலணிகளுக்கு வரி விதித்தீர்கள், எங்கள் பாதம் படும் மண்ணிற்கும் வரிவிதித்தீர்கள். எங்கள் கைப்பேசிக்கு வரி விதித்தீர்கள், அதன் அழைப்புகளுக்கும் வரிவிதித்தீர்கள். போதாதென்று எங்கள் இடிந்துவிழும் குடிசைகளின் சுவர்களுக்கும் வரி விதித்தீர்கள்.
எங்கள் ஊதியத்திற்கு வரிவிதித்தீர்கள் , நாங்கள் பயணிப்பதற்கும் வரி விதித்தீர்கள். ஒரு படி மேல் சென்று நாங்கள் இனிப்புடன் உன்பதற்கும் வரி விதித்தீர்கள். எங்களின் துன்பத்திற்கு, துயரத்திற்கு வரி விதித்தீர்கள், எங்கள் மகிழ்விற்கும், இன்பத்திற்கும் வரி விதித்தீர்கள்.
ஆண்டுக்கு ஆண்டு எங்கள் எதிர்காலத்திற்கு கூட வரிவித்திக்க ஆரம்பித்துவிட்டீர்கள். ஜி.எஸ்.டி., வருமானவரி, வரி முறைகள் குவியத் தொடங்கிடுச்சு – பெருகத் தொடங்கிடுச்சு.

வரி, கூடுதல் வரி,துணை வரி என கட்டி,கட்டி எங்களை பெருமூச்சு விட வைத்துவிட்டீர்கள். இருந்தும் உங்கள் சாலைகள் இன்னும் குண்டும் குழிகளாகவே காட்சியளிக்கிறது- தொடர்வண்டிகள் தொடர்ந்து தடம்புரண்டுகொண்டேதான் இருக்கிறது.
இத்துணை வரி கட்டியதெல்லாம் பாழாகிப் போனதா என கேட்டோம்.
நீங்கள் நகைத்துக்கொண்டே பதிலளித்தீர்கள் அத்துணை வரிவிதிப்பும் நாட்டின் வளர்ச்சிக்கு என்றீர்கள். நாங்கள் மீண்டும் உங்களிடத்தில் இதை எல்லாம் சரிசெய்ய முயற்சி செய்யுங்களேன் என்றோம்.

நீங்கள் ஆணித்தரமாக சொன்னீர்கள் – நாடு வளர்ந்துவிடும் என்று- நாங்களும் வளர்ந்து விடுவோம் என்று…..
இத்தனைக்கு பிறகும் நாட்டுப்பற்றுடன் நாங்கள் வரி கட்டிக்கொண்டே இருக்கிறோம். எங்கள் சிறு தொகை இந்த நாட்டை கட்டமைக்கும், இந்த நாட்டில் பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கையில் வரி செலுத்திக்கொண்டே இருக்கிறோம்.
மனமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம்.
தமிழாக்கம்: துரை.அருண்.
ஆங்கில மூலம்: சசி தரூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *