ஆரியர்கள் தங்கள் மனைவியரை தேவர்கள் உடன் வைத்துக்கொள்வதையும், கர்ப்பமாக்குவதையும் தங்களுடைய கவுரவமாக கருதினார்கள். இந்திரன், யமன், நசத்யா, அக்னி, வாயு முதலிய தேவர்கள் மூலம் ஆரியப் பெண்கள் பிள்ளைகளை பெற்றனர் என்ற குறிப்பை மகாபாரதத்திலும், ஹரிவம்சத்திலும் காணலாம்
தேவர்களுக்கும், ஆரிய பெண்களுக்குமிடையிலான முறைகேடான உடலுறவு நாளடைவில் வலுப்பட்டது. அது நிலப் பிரபுத்துவமாக வடிவம் பெற்றது. தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரு வரங்களை பெற்றனர்.
அசுரர்களுக்கு எதிராக போர் செய்து, ஆரியர்களை பாதுகாத்ததற்காக அவ்வப்போது யாகம் நடத்தி விருந்து படைக்க வேண்டும் என்பது முதல் வரம்.
ஆரிய பெண்களை அனுபவிக்கும் முதல் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று தேவர்கள் ஆரியர்களை கேட்டார்கள் – இது இரண்டாவது வரம்.
அதன்படி ஓர் ஆரியப் பெண்ணை அனுபவிக்கும் முதல் உரிமை சோமனுக்கு – இரண்டாவது கந்தர்வனுக்கு – மூன்றாவது அக்னிக்கு – கடைசி உரிமை ஆரியனுக்கு.
நூல் : அம்பேத்கரின் எழுத்துக்களும் – பேச்சுக்களும், தொகுதி – 4 .பக் 302.
மேற்கண்டவாறு பேராசான் அம்பேத்கர் அவர்கள் குறித்துள்ளமைக்கு ஏற்ப ஆரிய பெண்களுக்கு வழமையாக இருந்த மந்திரங்களை இதரர்களுக்கும் குறிப்பாக சூத்திரர்களுக்கும் திருமணகாலத்தில் புரோகிதன் கூறுகிறான்.
“சோம ப்ரதமோ
விவிதே கந்தர்வோ
விவித உத்தர த்ருத்யோ அக்நிஷ்டேபதி
துரியஸ்தே மனுஷ்யஜா”
ஆரிய பண்பாடும் ஒழுக்கமும் இவ்வளவு கேடுகெட்டதாக இருப்பதை தமிழர்களோ, தன்மானம் உள்ள எவருமோ ஏற்க முடியுமா?
அதை ஒழிப்பதற்காகவே தன்மான இயக்கத்தை தோற்றுவித்த தந்தை பெரியார் சுயமரியாதை திருமணமுறையை அறிமுகப்படுத்தினார்
அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும், தேவையில்லாத அதிகச் செலவும், அதிக காலக்கேடும் இருக்கக்கூடாது என்பதும்தான் சுயமரியாதைத் திருமண முறையின் தத்துவமாகும்.
முதல் சுயமரியாதை திருமணத்தை 28.2.1929இல் அருப்புக்கோட்டை சுக்கிலநத்தத்தில் தந்தை பெரியார் முன்னின்று நடத்தி வைத்தார். அன்று முதல் இலட்சக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் இன்றுவரையில் நடக்கின்றன. இடையில் அதற்கு இடையூறு ஏற்பட்டாலும் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு சுயமரியாதை திருமண முறையைச் சட்டமாக்கியது. “சுயமரியாதை திருமணம் பலநூற்றாண்டு அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஆய்வில் ஒரு தீர்வாக தந்தை பெரியாரால் கொண்டுவரப்பட்டது. இதனை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டது.