ஒரு கணக்கீடு!!

2 Min Read

72 ஆண்டுகளில் நாட்டில் என்ன நடந்துள்ளது என்பதை ஆராயுங்கள். 52 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி  12 ஆண்டுகள் பாஜக  ஆட்சி செய்துள்ளது  மீதமுள்ள 8 ஆண்டுகள் ஆட்சியில் வெவ்வேறு கட்சிகளின் 6 பிரதமர்கள். சட்டப்படி பார்த்தால் இந்தியாவில்  செயல்படுத்தி வந்த காரியங்களில் 1/6 (ஆறுக்கு ஒன்று என்ற கணக்கில்) என பா.ஜ.க. செய்திருக்க வேண்டும்? அதன்படி பா.ஜ.க. செய்துள்ளதா? 18 லட்சம் பள்ளிகளில் 3 லட்சம் பள்ளிகளை திறந்துள்ளதா? 8200 ரயில் நிலையங்களில் 1300 நிலையங்களை கட்டியதா பா.ஜ.க? பெண்கள் பள்ளி 45000 க்கு 7500  பள்ளிகளை பாஜக திறந்ததா? 1200 கால்வாய்களில் 200 கால்வாய்களை பா.ஜ.க. தோண்டியதா? 65 வங்கிகளில் 10 வங்கிகள் (தனியார், அரசு) பா.ஜ.க. ஆரம்பித்ததா? எஃகு ஆலை, அய்.அய்.டி, என ஏதாவது பா.ஜ.க. கட்டியுள்ளதா? 200 தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை நெடுஞ்சாலைகளை பா.ஜ.க. அமைத்தது? சைனிக் பள்ளி, கேந்திரிய வித்யாலயா, சர்வோதயா வித்யாலயா,  நவோதயா வித்தியாலயா இதில் பா.ஜ.க. எந்த பள்ளியை தொடங்கியது? 

உச்சநீதிமன்றம், எல்அய்சி, உயர்நீதிமன்றம் இவற்றில் பா.ஜ.க. தொடங்கிய நிறுவனம் எது? 25 டிராக்டர் தொழிற்சாலைகளில் ஏதாவது பா.ஜ.க.வால் நிறுவப்பட்டது? ஏதேனும் துறைமுகம்?  ஏதேனும் அணை?  ஏதேனும் புதிய நகரம்? நிர்வம் பவன், தொழில் பவன், சாஸ்திரி பவன்  பட்டேல் பவன், ரயில் பவன், விக்யன் பவன், ஷஹீத் பகத்சிங் காம்ப்ளக்ஸ் இதுபோன்று பா.ஜ.க. டில்லியில் ஏதேனும் கட்டிட கட்டுமானம் கட்சியுள்ளதா? ஆர்.டி.அய்., ஆதார், நூறு நாள் வேலைத்திட்டம், விதவை ஓய்வூதியம்.

இதுபோன்று பா.ஜ.க. எந்த திட்டம் தொடங்கி உள்ளது? இந்த பி.ஜே.பி.காரர்கள் எந்த பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில் படித்தார்கள் என்று யோசியுங்கள்? பெண் சிசுக்கள் காப்பாற்றப்பட்டது.   அதனால்தான் மக்கள் தொகை 30 கோடியில் இருந்து 130 கோடியாக உயர்ந்தது. பெண்கள் கல்வியறிவு பெற்றார்கள். அதனால் தான் அவர்கள் எல்லா இடங்களிலும் பணியாற்றுகிறார்கள், கடைநிலை ஊழியர் முதல் குடியரசுத் தலைவர் வரை ஆகிவிட்டனர். ஒவ்வொரு மனிதனும் தன் வீடு, அலுவலகம், கடை இவற்றை சுத்தமாக வைத்திருக்கிறான்.

அதுபோன்று நாட்டின் சாலைகள், நிலையங்கள், பூங்காக்கள் சுத்தம் செய்ய காங்கிரஸ் அரசால் 22 லட்சம் துப்புரவாளர்கள் நியமனம்    செய்யப்பட்டது  பாஜக அரசு, மதவாதத்தையும், வடக்கே ஹிந்துத்துவா என்ற பெயரில் வன்முறையை கையில் எடுக்கும் கும்பலையும் உருவாக்கியதையும் தவிர  வேறு ஒன்றும் செய்யவில்லை. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *